என்னாச்சு? திடீர்ன்னு கோபப்பட்ட வார்னர்.. அடுத்த ஓவரிலேயே நட்டு அனுப்பிய மெசேஜ்.. பரபர சம்பவம்

சென்னை: சமயங்களில் விக்கெட் விழவில்லை என்றாலும், எப்போதும் ரன் செல்வதை கட்டுப்படுத்தும் நடராஜன் நேற்று கொஞ்சம் லேசாக சொதப்பிவிட்டார்.

கொல்கத்தாவிற்கும் ஹைதராபாத்திற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. முதல் ஓவரில் இருந்து கடைசி பால் வரை ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. முக்கியமாக கொல்கத்தா அணி பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டது.

இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அதிரடியாக ஆடி 20 ஓவருக்கு 187/6 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய ஹைதராபாத் 177 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

தோல்வி

தோல்வி

இந்த போட்டியில் நேற்று ஹைதராபாத் பவுலர்கள் மோசமாக சொதப்பினார்கள். ரஷீத் கான் தவிர வேறு பவுலர்கள் யாரும் சரியாக பவுலிங் செய்யவில்லை. முக்கியமாக நடராஜன், புவனேஷ்வர் குமார் இருவருமே கொஞ்சம் சொதப்பினார்கள். புவனேஷ்வர் குமார் ஒவ்வொரு ஓவரிலும் 11 ரன்னுக்கும் அதிகமாக கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.

நடராஜன்

நடராஜன்

இவர் எல்லா ஓவரில் பவுண்டரி சிக்ஸர்களை வாரி வழங்கினார். இன்னொரு பக்கம் நடராஜனும் நேற்று தனது ஓவரையே சிக்சரோடுதான் தொடங்கினார். இவரின் முதல் பந்திலேயே கில் சிக்ஸர் அடித்துதான் இவரை வரவேற்றார். அதே ஓவரில் இன்னொரு பவுண்டரியும் சென்றது.

ராணா

ராணா

நடராஜன் வீசிய இரண்டாவது ஓவரில் ராணா, ராகுல் பவுண்டரிகளை விளாசினார்கள். இந்த ஓவரில் நடராஜன் பெரிய அளவில் ரன் செல்வதை கட்டுப்படுத்த முடியவில்லை. எப்போதும் ரன் செல்வதை கட்டுப்படுத்தும் நடராஜனே நேற்று ரன் கொடுத்ததை பார்த்து வார்னர் கோபம் அடைந்தார்.

கோபம்

கோபம்

நடராஜன் மற்றும் புவி ஓவர்களில் கொஞ்சம் கோபமாக இவர் காணப்பட்டார். என்ன இப்படி போடுறீங்க என்பது போல முகத்தை வைத்துக்கொண்டார். ஆனால் நட்டு தான் வீசிய மூன்றாவது ஓவரில் பார்மிற்கு வந்தார். துல்லியமாக யார்க்கர் வீசி ரன் செல்வதை கட்டுப்படுத்தினார். அவர் வீசிய 16வது ஓவரில் ஒரு விக்கெட் எடுத்தார். அதிரடியாக ஆடிய ராகுலை அவுட் செய்தார்.

வார்னர்

வார்னர்

அந்த ஓவரில் வெறும் 7 ரன்களை மட்டுமே நடராஜன் கொடுத்தார். அதற்கு பின் அடுத்த ஓவரிலேயே வெறும் 9 ரன்கள் கொடுத்து ஸ்கோரை கொஞ்சம் கட்டுப்படுத்தினார். நேற்று சென்னை பிட்சில் முதல் இன்னிங்சில் பவுலிங் போடுவது கஷ்டமாக இருந்தது.கடைசி ஓவரில் மட்டும் புவேனஸ்வர் குமார் 16 ரன்கள் கொடுத்தார். அந்த அளவிற்கு பிட்ச் மோசமாக இருந்தது.

ஆனால்

ஆனால்

ஆனால் அப்படிப்பட்ட பிட்சிலும் நடராஜன் முதலில் மோசமாக வீசினாலும் பின் உடனே பார்மிற்கு திரும்பி யார்க்கர்கள் மூலம் ரன் செல்வதை கட்டுப்படுத்தினார். உடனே பார்மிற்கு திரும்பி கோபப்பட்ட வார்னரை கொஞ்சம் கூல் படுத்தினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: How Natarajan come back to form after 2 not so good overs in SRH vs KKR match yesterday.
Story first published: Monday, April 12, 2021, 8:26 [IST]
Other articles published on Apr 12, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X