விளாசிய தள்ளிய ராணா - ராகுல் ஜோடி.. ஒரே பாலில் "திருகி விட்ட" நடராஜன்.. ஸ்மார்ட் பிளான்.. என்னாச்சு?

சென்னை: ஹைதராபாத்திற்கு எதிராக கொல்கத்தா அணி இன்று சிறப்பாக பேட்டிங் செய்தது. நடராஜன் மிக முக்கியமான கட்டத்தில் இன்று விக்கெட் எடுத்து ஹைதராபாத் அணிக்கு உதவினார்.

ஹைதராபாத் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி சென்னையில் அதிரடியாக நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி முதல் ஓவரில் இருந்தே சிக்ஸ், பவுண்டரி என்று வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கிறது.

ஓப்பனிங் இறங்கிய ராணா பவர் பிளேவை பயன்படுத்தி மாஸ் காட்டினார். இன்னொரு பக்கம் கில் அவுட் ஆனதும் ராகுல் திரிப்பாதி ராணாவோடு ஜோடி போட்டு ஹைதராபாத் பவுலர்களை துவைத்து எடுத்தனர்.

விக்கெட்

விக்கெட்

பொதுவாக நடராஜன், புவனேஷ்வர் குமார் இருவரும் ரன் கொடுக்க மாட்டார்கள். ரன் செல்வதை முக்கியமான நேரத்தில் கட்டுப்படுத்துவார்கள். ஆனால் இன்று நடராஜன், புவனேஷ்வர் குமார் என்று எல்லோரின் ஓவரிலும் ராணா - ராகுல் அடித்து வெளுத்தனர். பாரபட்சம் இன்றி எல்லோரின் ஓவரில் ரன் சென்றது.

ரன் சென்றது

ரன் சென்றது

நடராஜன் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் கொடுத்தார். அதேபோல் புவேனஸ்வர் குமாரும் 9 ரன்களுக்கு மேல் கொடுத்தார். விஜய் சங்கர் 14 ரன்களுக்கும் அதிகமாகவும், சந்திப் சர்மா 11 ரன்களுக்கு அதிகமாகவும் கொடுத்தனர். ரஷீத் கான் மட்டுமே சிறப்பாக பவுலிங் செய்து 6 ரன் ரேட் வைத்து இருந்தார்.

விக்கெட் எடுத்தார்

விக்கெட் எடுத்தார்

அதோடு கில், ரசல் விக்கெட்டையும் இவர் எடுத்தார். இன்று போட்டியில் ராணா - ராகுல் விக்கெட்டை எடுக்க முடியாமல் ஹைதராபாத் பவுலர்கள் திணறினார்கள். ஆனால் நடராஜன் முக்கியமான கட்டத்தில் பிரேக் கொடுத்தார். ராகுல் பேட்டிங் செய்த போது பந்தை சுற்றி வீசி, ஸ்லோவாக எறிந்தார்.

அவுட்

அவுட்

யார்க்கர் போடாமல் ஸ்லோவாக வீசினார் நடராஜன். இதை கணிக்க முடியாமல் ராகுல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ராகுல் - ராணா ஜோடி அதிரடியாக ஆடி வந்த நிலையில் நடராஜன் தனது ஸ்மார்ட் பிளான் மூலம் இந்த இணையை பிரித்தார். இதுதான் திருப்பு முனையாக இருந்தது. இதன் பின் ரசல், ராணா என்று வரிசையாக கொல்கத்தா வீரர்கள் அவுட் ஆனார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: How SRH Natarajan planned to break the partnership of Rana- Rahul of KKR in today match?
Story first published: Sunday, April 11, 2021, 21:01 [IST]
Other articles published on Apr 11, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X