For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்-ல் இருந்து தப்பி மாலத்தீவில் பதுங்கிய கமெண்டேட்டர்.. தாய் நாட்டுக்குள் செல்லவே தடை.. ஆதங்கம்!

மும்பை: ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர் பபுளில் இருந்து தப்பி மாலத்தீவில் பதுங்கியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வீரர்கள். ஊழியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

தமிழக வீரர் செய்த ஒரே ஒரு தவறு... டோட்டல் ஐபிஎல்-க்கும் சிக்கல்.. ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு கடுப்பு! தமிழக வீரர் செய்த ஒரே ஒரு தவறு... டோட்டல் ஐபிஎல்-க்கும் சிக்கல்.. ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு கடுப்பு!

இதனால் வீரர்கள், நடுவர்கள், வர்ணனையாளர்கள் என பலரும் தொடரை விட்டு விலகி சொந்த நாட்டை நோக்கி படை எடுத்துள்ளனர்.

தப்பி ஓட்டம்

தப்பி ஓட்டம்

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக இருந்து வந்தார். தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா அச்சுறுத்தலால் அவர் திடீரென பபுளில் இருந்து வெளியேறினார். ஆனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை. மாறாக மாலத்தீவுக்கு சென்று அங்கு முகாமிட்டுள்ளார். இதற்கு காரணம் ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்காததே ஆகும்.

ஆஸ்திரேலியர்களுக்கு தடை

ஆஸ்திரேலியர்களுக்கு தடை

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் மே 15ம் தேதி ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து அறிவித்த அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன், ஆஸ்திரேலியர்களாக இருந்தாலும் 15ம் தேதி வரை நாட்டுக்குள் வரக்கூடாது. கிரிக்கெட் வீரர்களுக்கும் இது பொருந்தும் என அறிவித்தார். மேலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வீரர்களுக்கு தனி விமானமும் ஏற்பாடு செய்ய முடியாது என அறிவித்துள்ளார்.

மைக்கேல் ஸ்லாட்டர் காட்டம்

மைக்கேல் ஸ்லாட்டர் காட்டம்

இந்நிலையில் அனுமதி கிடைக்காதது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மைக்கேல் ஸ்லாட்டர், ஆஸ்திரேலிய அரசு உண்மையில் தனது குடிமக்களின் பாதுகாப்பை விரும்பினால், ஆஸ்திரேலியர்களை வீட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். ஆனால் இது அவமானமாக உள்ளது. பிரதமர் ஸ்காட் எந்த தைரியத்தில் இப்படி செய்கிறார். அவரின் முடிவால் அவர் கைகள் ரத்தக்கறை ஆகி வருகிறது என்பதை உணர வேண்டும். நான் ஆஸ்திரேலிய அரசின் அனுமதியுடன் தான் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வந்தேன். ஆனால் தற்போது என்னை அந்த அரசே ஏற்க மறுக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

ஆதங்கம்

ஆதங்கம்

இவரை போன்றே ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட பல ஆஸ்திரேலிய வீரர்கள் ஆதங்கத்தில் உள்ளனர். விமான போக்குவரத்து விஷயத்தில் ஆஸ்திரேலிய அரசு கைவிட்டு விட்டதால் அவர்கள் வேறு வழியின்றி அணிகளின் பயோ பபுளில் இருந்து வருகின்றனர். வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக வெளியேறும் எண்ணத்தில் தான் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.,

ஐபிஎல் நிறுத்தப்படுமா?

ஐபிஎல் நிறுத்தப்படுமா?

இதனிடையே இன்று கொல்கத்தா அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கும், சிஎஸ்கேவை அணியின் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி , பஸ் க்ளீனர் ஆகிய் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடைபெறுமா என்பதிலேயே சிக்கல் எழுந்துள்ளது.

Story first published: Monday, May 3, 2021, 19:27 [IST]
Other articles published on May 3, 2021
English summary
IPL Commentator Michael Slater leaves IPL bubble, escapes to Maldives!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X