For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திடீர் ட்விஸ்ட்... தாய் நாட்டிற்கு சென்ற வீரர்கள் யார்? செல்லாத வீரர்கள் யார்? வெளியான முழு விவரம்!

டெல்லி: ஐபிஎல்-ல் பங்கேற்ற அயல்நாட்டு வீரர்களில் யாரெல்லாம் தாய் நாட்டிற்கு திரும்பினர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 14வது ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அயல்நாட்டு வீரர்களை, அவர்களது வீடுகளுக்கு அனுப்பும் பணியில் அனைத்து அணிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தென்னாப்பிரிக்க வீரர்கள்

தென்னாப்பிரிக்க வீரர்கள்

ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த டிவில்லியர்ஸ், டிகாக் உள்ளிட்ட மொத்த 10 தென்னாப்பிரிக்க வீரர்கள் நேற்று வீட்டிற்கு கிளம்பினர். மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்பாடு செய்த தனி விமானம் மூலம் அவர்கள் மும்பை மற்றும் தோஹா வழியாக தென்னாப்பிரிக்காவின் ஜோஹனஸ்பர்கிற்கு சென்றடைந்தார்.

நியூசிலாந்து வீரர்கள்

நியூசிலாந்து வீரர்கள்

நியூசிலாந்து நாட்டை சேர்ந்த மொத்தம் 10 வீரர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் இன்று தனி விமானம் மூலம் ஆக்லாந்து செல்லவுள்ளனர். இவர்களில் கேன் வில்லியம்சன், கெயில் ஜேமிசன், சாண்ட்னர், டாமி சிம்செக் ஆகியோர் மட்டும் நேரடியாக இங்கிலாந்து செல்லவுள்ளனர். அங்கு வரும் ஜூன் 2ம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர்கள் பங்கேற்கவுள்ளனர். அதன்படி வரும் மே 11ம் தேதி வரை டெல்லியில் மினி பபுள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த மொத்தம் 9 வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்தனர். அவர்கள் தென்னாப்பிரிக்க வீரர்களுடன் சேர்ந்து நேற்று தனி விமானம் மூலம் ஜோஹனஸ்பர்க் சென்று அங்கிருந்து ட்ரினிடாட் செல்வார்கள் என கூறப்படுகிறது.

வங்கதேச வீரர்கள்

வங்கதேச வீரர்கள்

வங்கதேச அணியை சேர்ந்த முஸ்திவிசூர் ரஹ்மான் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் டெல்லியில் இருந்து கிளம்பிய தனி விமானம் மூலம் தாய் நாட்டிற்கு சென்றடைந்தனர். அதே போல ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த 3 வீரர்கள் நாளை டெல்லியில் இருந்து தாய் நாட்டிற்கு செல்லவுள்ளனர்.

ஆஸ்திரேலிய வீரர்கள்

ஆஸ்திரேலிய வீரர்கள்

ஆஸ்திரேலியாவுக்கு இந்திய விமானங்கள் வர மே 15ம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தடை காலம் முடிந்த பிறகு தனி விமானம் மூலம் அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

Story first published: Friday, May 7, 2021, 14:10 [IST]
Other articles published on May 7, 2021
English summary
Is IPL's overseas players and staffs reached their home?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X