கடைசி பந்து வரை ‘திக் திக்’ நொடிகள்.. மிரட்டிய ரவீந்திர ஜடேஜா.. த்ரில் வெற்றி பெற்ற சிஎஸ்கே!

அபுதாபி: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 38வது லீக் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 171 ரன்களை குவித்தது.

4 ஓவருக்குள் 400 பிரச்னை..சிஎஸ்கே அணி தோற்றுவிடுமா?.. அனைத்து வீரர்களும் ஏமாற்றினர்.. சோகத்தில் தோனி4 ஓவருக்குள் 400 பிரச்னை..சிஎஸ்கே அணி தோற்றுவிடுமா?.. அனைத்து வீரர்களும் ஏமாற்றினர்.. சோகத்தில் தோனி

தொடக்கமே அதிர்ச்சி

தொடக்கமே அதிர்ச்சி

கொல்கத்தா அணியின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட தான் முற்பட்டது. இதனால் விக்கெட்களும் மலமலவென சரிந்தது. தொடக்க வீரர் சுப்மன் கில் 5 பந்துகளில் 9 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 15 பந்துகளில் 18 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இதன் பின்னர் கேப்டன் மோர்கன் 8 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தாலும் மறுமுணையில் ராகுல் திரிபாதி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினார். 33 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசி 45 ரன்களை விளாசினார்.

கடின இலக்கு

கடின இலக்கு

ஒரு கட்டத்தில் 89 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது நிதிஷ் ராணா அணியின் ஸ்கோரை தூக்கி நிறுத்த உதவினார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரே ரஸல் 15 பந்துகளில் 18 ரன்களை விளாசினார். கடைசி சில ஓவர்களில் தினேஷ் கார்த்திக் 26 ரன்களை விளாச அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை சேர்த்தது.

தொடக்கம்

தொடக்கம்

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. தொடக்க வீரர்கள் ருத்ராஜ் கெயிக்வாட் 28 பந்துகளில் 40 ரன்களும், ஃபாப் டூப்ளசிஸ் 30 பந்துகளில் 43 ரன்களும் அடித்து அசத்தினர். இதனால் முதல் விக்கெட்டிற்கு அந்த அணி 74 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் வந்த மொயின் அலி 32 ரன்கள் அடிக்க ஓரளவிற்கு சிஎஸ்கேவின் ரன்கள் உயர்ந்தது.

ஏமாற்றிய நட்சத்திர வீரர்

ஏமாற்றிய நட்சத்திர வீரர்

ஆனால் அதன்பின்னர் வந்த வீரர்கள் பெரும் அளவில் சொதப்பினர். அம்பத்தி ராயுடு 10 (9), சுரேஷ் ரெய்னா (11), எம்.எஸ்.தோனி (1) என அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் 142 ரன்களுக்கு சிஎஸ்கே அணி 6 விக்கெட்களை இழந்தது. மேலும் கடைசி 12 பந்துகளில் அந்த அணிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா அனைவருக்கும் விருந்து வைத்தார்.

திக் திக் நிமிடங்கள்

திக் திக் நிமிடங்கள்

பிரஷித் கிருஷ்ணா வீசிய 18வது ஓவரை எதிர்கொண்ட ஜடேஜா, (1, 1, 6, 6, 4, 4) சிக்ஸர், பவுண்டரி என மொத்தமாக 22 ரன்களை பறக்கவிட்டார். இதனால் சிஎஸ்கே அணிக்கு கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது பந்துவீச வந்த சுனில் நரேன் முதல் பந்திலேயே ஷர்துல் தாக்கூரின் விக்கெட்டை எடுத்தார். பின்னர் 2வது பந்தில் டாட், 3வது பந்தில் 3 ரன்கள் என பரபரப்பாக கொண்டு சென்றார். கடைசி 2 பந்துகளில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜாவும் அவுட்டானார். இறுதியில் தீபக் சஹார் கடைசி பந்தில் ரன் அடித்து வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 கணிப்புகள்
Match 5 - October 19 2021, 03:30 PM
ஸ்காட்லாந்து
பாபுவா நியூ கினி
Predict Now
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
All rounder Jadeja's Massive attack helps CSK for thrill victory against KKR
Story first published: Sunday, September 26, 2021, 19:48 [IST]
Other articles published on Sep 26, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X