For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருப்பா இவரு.. கண்ணிமைக்கு நேரத்தில் நடந்த அந்த சம்பவம்.. டேஞ்சர் பேட்ஸ்மேனுக்கு ஜடேஜாவின் செய்கை!

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மிகப்பெரும் ஹிட்டிங் பேட்ஸ்மேன்களை அசால்டாக ஜடேஜா வெளியேற்றியது வைரலாகி வருகிறது.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து பஞ்சாப் கிங்ஸ் அணி படு மோசமாக விளையாடி வருகிறது.

இதில் சென்னை அணியின் ஆல்- ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தான் ஃபீல்டிங்கில் கிங் என மீண்டும் நிரூபித்துள்ளார். இவரின் துடிப்பான ஃபீல்டிங் பஞ்சாப் அணியின் அடிதளத்தையே உடைத்துள்ளது.

ஐபிஎல்-ல் புது வரலாறு படைத்த கேப்டன் தோனி.. சிஎஸ்கேவிற்கு பெருமை.. விமர்சனங்களுக்கு நடுவிலும் மாஸ்ஐபிஎல்-ல் புது வரலாறு படைத்த கேப்டன் தோனி.. சிஎஸ்கேவிற்கு பெருமை.. விமர்சனங்களுக்கு நடுவிலும் மாஸ்

ஓப்பனிங் தடுமாற்றம்

ஓப்பனிங் தடுமாற்றம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார், பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் என 4 விக்கெட்களை எடுத்து அசத்தினார். இதனால் 26 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது பஞ்சாப் அணி.

ஆச்சரியம் தந்த ஜடேஜா

இப்போட்டியில் தீபக் சஹாரின் பந்துவீச்சு ஒரு புறம் பாராட்டப்பட்டு வந்தாலும், மறுபுறம் ஜடேஜாவின் உலகின் தலை சிறந்த ஃபீல்டர் என மீண்டும் நிரூபித்துள்ளார். ஆட்டத்தின் 3வது ஓவரின் 5வது பந்தை தீபக் சஹார் வீச களத்தில் இருந்த கிறிஸ் கெயில் அதனை சிங்கிலுக்கு தட்டிவிட்டார். இதனையடுத்து கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில் ரன் எடுக்க ஓடினர். ஆனால் பந்து நேராக ஜடேஜா கையில் சிக்கியது. சற்றும் யோசிக்காத அவர் கண் இமைக்கும் நேரத்தில் ராகுல் ஓடிய திசையில் உள்ள ஸ்டம்பை நோக்கி அடித்து ரன் அவுட் ஆக்கினார். மிகவும் வேகமாக செயல்பட்டு விக்கெட் எடுத்த ஜடேஜாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

பட்டியலில் முதலிடம்

பட்டியலில் முதலிடம்

ஐபிஎல் போட்டிகளில் ஜடேஜா எடுக்கும் 22வது ரன் அவுட் இதுவாகும். இதன் மூலம் ஐபிஎல்-ல் அதிக முறை ரன் அவுட் எடுத்த வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் விராட் கோலி 17 முறையும், சுரேஷ் ரெய்னா 15 முறையும் ரன் அவுட் எடுத்துள்ளனர்.

கேட்ச்

இதே போல இந்த போட்டியில் கேட்ச் பிடிப்பதிலும் ஜடேஜா வியப்பை ஏற்படுத்த மறக்கவில்லை. 5வது ஓவரில் சஹார் வீசிய பந்தை டேஞ்சர் பேட்ஸ்மேனாக கருதப்படும் கிறிஸ் கெயில் பவுண்டரிக்கு அடிக்க துறத்தினார். ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்த ஜடேஜா அசால்டாக டைவ் அடித்து பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். இதே போல ஆட்டத்தின் 20வது ஓவரில் ஷாருக்கான் தூக்கி அடித்த பந்தையும் ஜடேஜா கேட்ச் பிடித்தார்.

ஃபுல் ஃபார்ம்

ஃபுல் ஃபார்ம்

காயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜடேஜா ஐபிஎல் தொடரில் எப்படி செயல்பட போகிறார் என குழப்பம் நிலவி வந்தது. ஆனால் இந்த போட்டியில் 2 கேட்ச், 1 ரன் அவுட் எடுத்துள்ளார். அதே போல பவுலிங்கில் 4 ஓவர்கள் வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அவரின் இந்த செயல்பாடு குழப்பத்திற்கு பதிலளித்துள்ளது.

Story first published: Friday, April 16, 2021, 22:27 [IST]
Other articles published on Apr 16, 2021
English summary
Jadeja’s super man fielding show is back, completes excellent run out, takes excellent catch
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X