இதுக்குதான் இவ்ளோ ஆரவாரமா? ஐதராபாத் வீரரால் திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. மும்பைக்கு 2வது வாய்ப்பு!

சென்னை: ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அச்சுறுத்தல் ஏற்படுத்திய நிலையில் மும்பை அணிக்கு சூப்பர் ஜாக்பாட் அடித்ததுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 151 ரன்களை ஐதராபாத் அணிக்கு இலக்காக நிர்ணயித்ததுள்ளது. இதனையடுத்து இலக்கை நோக்கி ஐதராபாத் அணி வேகமாக நகர்ந்து வருகிறது.

அந்த 6 ஓவர்.. என்ன நடந்தது என்றே புரியவில்லை.. ரோஹித் முதல் எல்லோரையும் குழப்பிய சம்பவம்.. பின்னணி

அதிரடி ஓப்பனிங்

அதிரடி ஓப்பனிங்

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் தொடக்கம் அட்டகாசமாக அமைந்த போதிலும் அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்து திணறியது. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா ( 32) டிகாக் (40) மற்றும் பொல்லார்ட் (35) ரன்களை எடுத்தனர்.

மும்பை அணிக்கு தலைவலி

மும்பை அணிக்கு தலைவலி

இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியிலும் மும்பை அணியை போலவே அதிரடி தொடக்கம் கிடைத்தது. ஓப்பனர்கள் ஜானி பேர்ஸ்டோ - டேவிட் வார்னர் ஜோடி பவர் ப்ளேவில் வேகமாக ரன்களை குவித்தனர். இதனால் 6 ஓவர்களில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்களை எடுத்தது. குறிப்பாக ஜானி பேர்ஸ்டோ மும்பை பந்துவீச்சை அடுத்தடுத்து சிக்ஸர் விளாசி தள்ளினார். இவர்களை பிரிக்க 7வது ஓவரில் ஒரு ரன் அவுட் வாய்ப்பு கிடைத்தும் மும்பை அணி அதை மிஸ் செய்தது.

அடித்த ஜாக்பாட்

அடித்த ஜாக்பாட்

இதனால் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை எப்படி பிரிக்க என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த மும்பை அணிக்கு 8 ஓவரில் அதிர்ஷ்டம் அடித்தது. க்ருணால் பாண்டியா வீசிய அந்த ஓவரில் 2வது பந்தை பேர்ஸ்டோ ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரது கால், பின்னர் இருந்த ஸ்டம்பில் மோதி ஹிட் விக்கெட் ஆனார். அதிரடியாக ஆடி 22 பந்துகளில் 43 ரன்கள் அடித்த பேர்ஸ்டோ இதுபோன்ற முறையில் அவுட்டானது ரசிகர்களுக்கு வருத்தளமளித்தது.

அடுத்தடுத்து விக்கெட்கள்

அடுத்தடுத்து விக்கெட்கள்

பேர்ஸ்டோவின் விக்கெட்டிற்கு பிறகு ஐதராபாத் அணியில் தோய்வு ஏற்பட்டது. முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய மணிஷ பாண்டே 2 ரன்களுக்கும், வார்னர் 36 ரன்களுக்கும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால் அந்த அணி 91 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து சற்று நிதானமாக ஆடி வருகிறது. களத்தில் தமிழக வீரர் விஜய் சங்கர் மற்றும் விராட் சிங் ஆகியோர் ஆடி வருகின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Jonny Bairstow Rare Dismissal gives a lucky breakthorugh for mumbai indians
Story first published: Saturday, April 17, 2021, 22:50 [IST]
Other articles published on Apr 17, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X