For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பந்தை உடனே மாத்துங்க.. ஒன்றுக்கு 2 முறை புகார் செய்த ராகுல்.. கடுகடுத்த நடுவர்.. பரபரப்பு சம்பவம்

மும்பை: டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. பஞ்சாப் நேற்று சிறப்பாக ஆடி இருந்தாலும், டெல்லி ஓப்பனர்களின் அதிரடி காரணமாக பஞ்சாப் வீழ்ந்தது.

Recommended Video

Punjab Kingsஐ வெச்சி செய்து Delhi capitals அபார வெற்றி|Oneindia Tamil

நேற்று டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் செய்தது. பேட்டிங் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 195 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணிக்கு நேற்று வெற்றிபெற வாய்ப்பு இருந்தது.

ஆனால் அந்த அணியின் பவுலர்கள் மிக மோசமாக சொதப்பினார்கள். இதனால் டெல்லி வெறும் 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

வெற்றி

வெற்றி

இந்த போட்டியில் நேற்று கேப்டனாக ராகுல் நிறைய தவறுகளை செய்தார். இவரின் ஓவர் ரொட்டேஷன் சரியில்லை. இவர் பீல்டிங் நிற்க வைத்த விதமும் சரியாக அமையவில்லை. இதுவே பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது.

காரணம்

காரணம்

அதோடு முக்கியமாக நேற்று ராகுல் பாஸ்ட் பவுலர்களை சரியாக பயன்படுத்தவில்லை. மும்பை பிட்ச் பாஸ்ட் பவுலர்களுக்கு சாதகமான பிட்ச். ஆனாலும் ராகுல் இவர்களுக்கு சரியான லைன் மற்றும் லென்தில் போடும்படி ஊக்குவிக்கவில்லை. முக்கியமாக நேற்று அதிகம் பனி பெய்து பந்து ஈரமானதும் கூட அந்த அணிக்கு எதிராக சென்றது.

புகார்

புகார்

பனி பெய்ததால் பாஸ்ட் பவுலர்களின் ஓவரில் அதிக ரன்கள் செல்கிறது என்று நேற்று ராகுல் நடுவரிடம் கூட புகார் வைத்தார். பனி காரணமாக பிட்ச் ஈரமாக இருக்கிறது. பந்து நழுவி நழுவி செல்கிறது. இதனால் பந்தை மாற்றுங்கள் என்று ராகுல் நடுவரிடம் கோரிக்கை வைத்தார்.

கோரிக்கை

கோரிக்கை

இரண்டு முறை நடுவரிடம் ராகுல் இப்படி கோரிக்கை வைத்தார். ஆனால் நடுவர்கள் ராகுலின் கோரிக்கையை ஏற்கவில்லை. மாறாக இதற்கெல்லாம் ரூல்சில் இடமில்லை, புதிய பந்தை கொடுக்க முடியாது என்று கூறி கே. எல் ராகுலுக்கு நடுவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

Story first published: Monday, April 19, 2021, 11:00 [IST]
Other articles published on Apr 19, 2021
English summary
IPL 2021: K L Rahul asked to change the ball twice in yesterday match for Punjab
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X