For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் போட்டிகளுக்கு புது சிக்கல்.. முக்கிய மைதானம் ரத்து செய்யப்படுகிறதா? முழு விவரம்

கர்நாடகா: ஐபிஎல் போட்டிகள் பெங்களூரு மைதானத்தில் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏப்.9ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் கொரோனாவுக்கு மத்தியிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சில போட்டிகள்ல வின் பண்ணிட்டா போதும்... அப்புறம் பாருங்க எங்களை மிஞ்ச முடியாது... உனாத்கட் உறுதி சில போட்டிகள்ல வின் பண்ணிட்டா போதும்... அப்புறம் பாருங்க எங்களை மிஞ்ச முடியாது... உனாத்கட் உறுதி

இதுவரை 22 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மீதம் 38 ஆட்டங்கள் உள்ளன. மே.30ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

ஐபிஎல்

ஐபிஎல்

கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் வீரர்களின் பயணத்தை குறைக்க இந்தாண்டு குறைந்த அளவிலான மைதானங்களே ஐபிஎல்-க்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மற்றும் மும்பையில் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது டெல்லி மற்றும் அகமதாபாத் மைதானங்கள் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இதுகுறித்து காங். எம்.எல்.சி,பிரகாஷ் ரத்தோட், கர்நாடக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், உலகில் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. திறந்த வெளிகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதை கண்களால் பார்க்க முடிகிறது. இந்த சூழலில் ஐபிஎல் போட்டிகள் அவசியம் தானா, பபுள்களுக்குள் வீரர்களை வைத்திருப்பது அவர்களின் மனநிலையை பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.

பெங்களுரூ மைதானம்

பெங்களுரூ மைதானம்

இந்தியாவில் அதிகம் கொரோனா பாதிப்புகளை கொண்ட நகரங்களில் ஒன்றாக பெங்களூரு உள்ளது. பெங்களூரு சின்னச்சாமி மைதானம் நகரத்தின் மையத்தில் உள்ளது. எனவே அங்கு ஐபிஎல் போட்டிகளை நிறுத்திவிட்டு, கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் போட்டிகள்

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு மைதானத்தில் 10 போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியானது வரும் மே 9ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. கடைசி போட்டி பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே மே 22ம் தேதி நடைபெறவுள்ளது.

Story first published: Wednesday, April 28, 2021, 18:13 [IST]
Other articles published on Apr 28, 2021
English summary
Karnataka Congress MLC Demands Suspension of IPL; Asks Bangalore Stadium to Turn into Corona Hospital
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X