For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எதே பஞ்சாப் தோல்வியா?..கடைசி ஓவரில் நடந்த மகா ட்விஸ்ட்.. அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்கள்!

துபாய்: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Recommended Video

Punjab Kings தோல்விக்கு Anil Kumbleவின் Team Selection காரணமா? | I OneIndia Tamil

ஐபிஎல் தொடரின் 32வது லீக் ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

3 முறை தொடர்ந்து ஒரே தவறு.. பஞ்சாப் அணியை வளர்த்துவிட்ட ராஜஸ்தான்.. கடின இலக்கை எளிதாக துரத்தியது! 3 முறை தொடர்ந்து ஒரே தவறு.. பஞ்சாப் அணியை வளர்த்துவிட்ட ராஜஸ்தான்.. கடின இலக்கை எளிதாக துரத்தியது!

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 186 ரன்களுக்கு சுருண்டது.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

அந்த அணியின் ஓப்பனிங் ஜோடியான எவின் லீவிஸ் - ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 54 ரன்களை சேர்த்தனர். லீவிஸ் 36 ரன்களுக்கு அவுட்டானார். அதன் பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்கள், லிவிங்ஸ்டன் 25 ரன்களுக்கு வந்த வேகத்தில் வெளியேறினர். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் - லாம்ரார் சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். எனினும் இந்த ஜோடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

கடைசி கட்டத்தில் சொதப்பல்

கடைசி கட்டத்தில் சொதப்பல்

சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஷ்வால் 49 ரன்களுக்கு வெளியேறினார். லாம்ரார் 43 ரன்களுக்கு வெளியேறினார். இதன் பின்னர் வந்த வீரர்களில் ஒருவர் கூட இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை. ராகுல் தேவட்டியா, கிறிஸ் மோரிஸ் என அனைவரும் ஏமாற்றினர். 166 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்த அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

கடின இலக்கு

கடின இலக்கு

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க ஜோடி முதலில் நிதானமாக விளையாடினர். கே.எல்.ராகுல் தொடக்கத்திலேயே கொடுத்த 3 கேட்ச்களை ராஜஸ்தான் வீரர்கள் தவறவிட்டதால், அந்த அணியின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டிற்கு 120 ரன்களை சேர்த்தது.

அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல் 49 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்த சில பந்துகளில் மயங்க் அகர்வால் 67 ரன்களுக்கு வெளியேறினார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த எய்டன் மார்க்ரம் மற்றும் நிகோலஸ் பூரண் சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

இருப்பினும் ஆட்டத்தின் கடைசி ஓவரில் மிகப்பெரும் ட்விஸ்ட் ஏற்பட்டது. கடைசி 6 பந்துகளில் பஞ்சாப் அணிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அந்த ஓவரை வீசிய இளம் வீரர் கார்த்திக் தியாகி, முதல் பந்து டாட் ஆனது. 2வது பந்தில் மர்க்ராம் ஒரு ரன் அடித்தார். 3வது பந்தில் சிறப்பாக விளையாடி வந்த நிகோலஸ் பூரணின் விக்கெட்டை எடுத்தார். இதனால் கடைசி 3 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டது. இதன் பின்னர் 4 வது பந்தும் டாட் ஆனது. 5வது பந்தில் தீபக் ஹூடா டக் அவுட்டாகி வெளியேறினார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது அதுவும் டாட் ஆனது. இதனால் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் ஒரே ஒரு ரன்னை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார் கார்த்திக் தியாகி.

புள்ளிப்பட்டியல் விவரம்

புள்ளிப்பட்டியல் விவரம்

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை எடுத்தது. இந்த போட்டியிலும் பஞ்சாப் அணி தோல்வியடைந்ததால் இந்த சீசனில் தனது 6வது தோல்வியை பதிவு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது.

Story first published: Wednesday, September 22, 2021, 7:55 [IST]
Other articles published on Sep 22, 2021
English summary
Kartik Tyagi's last over helped RR to beat punjab kings by 3 runs in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X