நீங்களாம் எதுக்கு இருக்கீங்க.. SRH வீரர்களை வெளுத்து வாங்கிய காவ்யா மாறன்?.. வாயே பேசாத சீனியர்கள்!

அமீரகம்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சொதப்பலால் சீனியர் வீரர்கள் என்றும் பாராமல் உரிமையாளர் காவ்யா மாறனிடம் இருந்து வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

kavya Maran Scolds SRH Player in Meeting After The Deafeat Against Punjab Kings | Oneindia Tamil

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

'சூப்பர் சண்டே’.. ரசிகர்களுக்கு இன்று செம விருந்து.. புள்ளிப்பட்டியலை மாற்றும் 3 'தலை’களின் ஆட்டம்!'சூப்பர் சண்டே’.. ரசிகர்களுக்கு இன்று செம விருந்து.. புள்ளிப்பட்டியலை மாற்றும் 3 'தலை’களின் ஆட்டம்!

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் ஒருவர் கூட பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.

 பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ்

பிட்ச்-ல் பந்து நின்றுவந்ததால் பேட்ஸ்மேன்கள் திணறினர். இதனால் அதிகபட்சமாக மார்க்கரம் 27 (32) ரன்கள், கே.எல்.ராகுல் 21 (21), சேர்க்க பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 125 ரன்களை மட்டும் தான் சேர்த்தது. ஐதராபாத் அணியின் சார்பில் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

சீனியர் வீரர்களே சொதப்பல்

சீனியர் வீரர்களே சொதப்பல்

126 என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த கனவுகள் சுக்கு நூறாக உடைந்தது. நட்சத்திர வீரர்கள் டேவிட் வார்னர் 2 (3), கேன் வில்லியம்சன் 1 (6), மனிஷ் பாண்டே 13 (23), கேதர் ஜாதவ் 12 (12) என வந்த வேகத்தில் வெளியேறினர். மறுமுணையில் நிலைத்து நின்ற விருத்திமான் சாஹா நிதானமாக விளையாடி 37 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். ஆனால் அவரும் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

அதிர்ச்சி தோல்வி

அதிர்ச்சி தோல்வி

64 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து திணறி வந்த ஐதராபாத் அணியை ஜேசன் ஹோல்டர் தூக்கி நிறுத்தினார். அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸர்களை பறக்கவிட்டதால், கடைசி 12 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் ஸ்ட்ரைக் சரியாக கிடைக்காத காரணத்தால் ஹோல்டராலும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இறுதியில் 120 ரன்களை மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

ஐதராபாத் வெளியேறியது

ஐதராபாத் வெளியேறியது

இந்த தோல்வியின் மூலம் ஐதராபாத் அணியின் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது. இந்தாண்டு ஐபிஎல்-ல் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு, இந்தாண்டு ஐபிஎல்-ல் இருந்து வெளியேறிய முதல் அணியானது சன் ரைசர்ஸ் ஐதராபாத்.

காவ்யா மாறன்

காவ்யா மாறன்

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பின்னர் ஐதராபாத் அணி வீரர்களை, அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் வெளுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. 2 கேப்டன்களை நியமித்துவிட்டும் வெற்றி பெறவில்லை. 126 என்ற குறைந்த ஸ்கோரை கூட உங்களால் அடிக்க முடியவில்லை. இதுதான் நீங்கள் ஆடும் லட்சணமா, மிகப்பெரும் வலிகளை இது தருகிறது கூறியுள்ளதாக தெரிகிறது. இதுமட்டுமல்லாமல் வார்னர், வில்லியம்சன், மணிஷ் பாண்டே உள்ளிட்ட சீனியர் வீரர்கள் என்றும் பாராமல் அவர்களையும் விட்டு விளாசி இருப்பதாக தெரிகிறது.

எழுச்சி

எழுச்சி

காவ்யா மாறனிடன் வாங்கிய பேச்சால் இனி வரும் போட்டிகளில் ஐதராபாத் அணி பெரும் மாற்றத்துடன் அதிரடி காட்டும் எனத் தெரிகிறது. தொடரில் இருந்து வெளியேறினாலும், கடைசி இடத்தை பிடித்துவிடக்கூடாது என காவ்யா மாறன் ஸ்ட்ரிக்டாக தெரிவித்துவிட்டதாக தெரிகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Kavya Maran Scolds SRH Player in meeting, after the deafeat against Punjab kings in IPL 2021
Story first published: Sunday, September 26, 2021, 10:58 [IST]
Other articles published on Sep 26, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X