For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன நினைச்சிட்டு இருக்கீங்க.. இவரை எடுக்குறீங்களா? சிஎஸ்கே வீரருக்கு வார்னர் குறி.. பறந்த வார்னிங்

சென்னை: சிஎஸ்கே அணியில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட முக்கியமான வீரர் ஒருவரை ஹைதராபாத் அணி அடுத்தடுத்த போட்டிகளில் களமிறக்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது.

லட்டு போல வெற்றிபெற வாய்ப்பு இருந்த ஆட்டத்தில் நேற்று ஹைதராபாத் தோல்வி அடைந்தது. பெங்களூர் அணியை 149 ரன்களுக்கு கட்டுப்படுத்திய ஹைதராபாத் அந்த ரன்னை கூட எடுக்க முடியாமல் தோல்வி அடைந்தது.

இந்த ஒரு அரைசதத்துக்காக 5 வருஷம் காத்திருக்க வச்சுட்டீங்களே மேக்ஸ்வெல்... ஆர்சிபி நம்பிக்கை வீணாகல! இந்த ஒரு அரைசதத்துக்காக 5 வருஷம் காத்திருக்க வச்சுட்டீங்களே மேக்ஸ்வெல்... ஆர்சிபி நம்பிக்கை வீணாகல!

இரண்டாவது பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 143 ரன்கள் எடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பியதே இதற்கு காரணம் .

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாத் அணியில் மிடில் ஆர்டரில் நிலையாக நின்று ஆட கூடிய வீரர்கள் இல்லை. சமத் புதிய வீரர் என்பதால் அவரை நம்ப முடியாது. மணீஷ் பாண்டே டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுகிறார். இவர்கள் போக மிடில் ஆர்டரில் இந்திய வீரர் என்று பார்த்தால் அது விஜய் சங்கர் மட்டும்தான்.

விஜய் சங்கர்

விஜய் சங்கர்

விஜய் சங்கர் கடந்த ஒரு வருடமாக முதல் தர போட்டிகளில் ஆடவில்லை. அதற்கு முன் ஐபிஎல் தொடரில் விஜய் சங்கர் ஒரே ஒரு போட்டியில்தான் ஆடினார். சில போட்டிகளில் இவர் ஆடினாலும் கூட, கடைசி வரை நின்று ஆட கூடிய திறமை கொண்ட வீரர் இவர் கிடையாது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இதனால் சிஎஸ்கேவில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டு, கடந்த ஏலத்தில் ஹைதராபாத் அணியால் எடுக்கப்பட்ட கேதார் ஜாதவை வார்னர் விஜய் சங்கரின் இடத்தில் களமிறக்குவார் என்கிறார்கள். ஜாதவ் தேவைப்படும் நேரங்களில் ஸ்பின் போடுவார். கடந்த ஒரு வருடமாக முதல் தர போட்டிகளில் ஆடி வருகிறார். இதனால் சிஎஸ்கேவில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டு, கடந்த ஏலத்தில் ஹைதராபாத் அணியால் எடுக்கப்பட்ட கேதார் ஜாதவை வார்னர் விஜய் சங்கரின் இடத்தில் களமிறக்குவார் என்கிறார்கள். ஜாதவ் தேவைப்படும் நேரங்களில் ஸ்பின் போடுவார். கடந்த ஒரு வருடமாக முதல் தர போட்டிகளில் ஆடி வருகிறார்.

முதல் தர போட்டி

முதல் தர போட்டி

சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரிலும் இரண்டு அரைசதம் அடித்து மாஸ் காட்டினார். தற்போது இவர் சிறப்பான பார்மில் இருக்கிறார். முக்கியமாக இந்திய பிட்சில் இவர் நன்றாக ஆடும் திறன் கொண்டவர்.

விஜய் சங்கர்

விஜய் சங்கர்

இதனால் விஜய் சங்கருக்கு பதிலாக ஜாதவ் களமிறக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் ஜாதவை அணியில் எடுக்க வேண்டாம், அவரும் டெஸ்ட் இன்னிங்ஸ்தான் ஆடுவார் என்று எஸ்ஆர்எச் ரசிகர்கள் பலர் வார்னரை எச்சரித்து உள்ளனர்.

Story first published: Thursday, April 15, 2021, 17:52 [IST]
Other articles published on Apr 15, 2021
English summary
IPL 2021: Kedar Jadhav may debut in Hyderabad team in the place of Vijay Shankar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X