For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே வீரர்னா பெருசா? அவரை மொத்தமாக நீக்கி அதிரடி காட்டிய வார்னர்.. தோனியிடம் இல்லாத துணிச்சல்!

சென்னை: சிஎஸ்கே அணியில் இருந்து சென்ற முக்கியமான வீரர் ஒருவரை ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் மொத்தமாக ஒதுக்கி உள்ளார்.

நேற்று கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி மோசமாக தோல்வி அடைந்தது. ஹைதராபாத் அணியின் பவுலிங் மோசமாக இருந்ததாலும், அதன் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பியதாலும் அந்த அணி தோல்வி அடைந்தது.

சேப்பாக்கத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவருக்கு 187/6 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய ஹைதராபாத் 177 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

மோசம்

மோசம்

நேற்று ஹைதராபாத் அணியில் யார் எல்லாம் எடுக்கப்படுவார்கள் என்ற கேள்வி நிலவியது. எதிர்பார்த்தபடி நேற்று நடந்த போட்டியில் கேதார் ஜாதவ் எடுக்கப்படவில்லை. இவர் கடந்த வருடம் சிஎஸ்கே அணியில் ஆடினார். கிட்டத்தட்ட 6 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக இவர் ஆடினார். ஆனால் எல்லா போட்டியிலும் சொதப்பினார்.

டெஸ்ட்

டெஸ்ட்

டி 20 போட்டிகளுக்கு வந்துவிட்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது போல மோசமாக ஆடினார். பல போட்டிகளில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கும் கூட இவர் காரணமாக இருந்தார். இவர் மோசமாக ஆடியும் கூட தொடர்ந்து தோனி இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். ஏனோ இவரை நீக்கும் எண்ணம் இல்லாமல் தோனி வாய்ப்பு கொடுத்துக்கொண்டே வந்தார்.

நீக்கம்

நீக்கம்

இந்த நிலையில் இந்த வருடம் ஹைதராபாத் அணியால் எடுக்கப்பட்ட ஜாதவ் மொத்தமாக ஓரம்கட்டப்பட்டுள்ளார்/ நேற்று ஆடும் அணியில் இவர் எடுக்கப்படவில்லை. இனியும் இவர் எடுக்கப்பட வாய்ப்பு இல்லை என்கிறார்கள். இவர் சையது முஷ்டாக் கோப்பை தொடரில் சிறப்பாக ஆடினார்.

திணறல்

திணறல்

ஐபிஎல்லில் திணறிய ஜாதவ் சையது முஷ்டாக் கோப்பை தொடரில் மொத்தமாக பார்மிற்கு வந்தார். ஆனாலும் இவர் மீது நம்பிக்கை வைக்காத ஹைதராபாத் அணி நிர்வாகம் இவரை மொத்தமாக ஓரம்கட்டியுள்ளது. முன்னாள் சிஎஸ்கே வீரர் என்றெல்லாம் நினைக்காமல் துணிச்சலாக வார்னர் இவரை ஓரம் காட்டியுள்ளார்.

சமத்

சமத்

இவருக்கு பதிலாக, சமத் நேற்று களமிறங்கினார். சமத் நேற்று சிறப்பாக ஆடினார். இதனால் இனி வரும் போட்டிகளிலும் கண்டிப்பாக கேதார் ஜாதாவிற்கு ஹைதராபாத் அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று கூறுகிறார்கள்.

Story first published: Monday, April 12, 2021, 10:20 [IST]
Other articles published on Apr 12, 2021
English summary
IPL 2021: Kedar Jadhav may not get any chance in SRH team as Samad playing well
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X