கடைசி வரை பரபரப்பு கெயிரின் பொல்லார்ட் காட்டடி.. விழிப்பிதுங்கிய தோனி..மும்பை அணி த்ரில் வெற்றி!

டெல்லி: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி வழக்கம் போல கடைசி பந்து வரை விறுவிறுப்பாக சென்று ரசிகர்களுக்கு விருந்துபடைத்தது.

முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 219 ரன்கள் எடுத்தது.

இது தான் ப்ளேயிங் 11... தோனியின் வழக்கமான ஃபார்முளா.. புதிய ஸ்கெட்ச் உடன் மும்பை அணி

தொடக்கம்

தொடக்கம்

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர் ருத்ராஜ் கெயிக்வாட் 4 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தார். இதனால் தொடக்கமே சிஎஸ்கேவுக்கு சரிவாக இருந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த மொயின் அலி - டுப்ளசிஸ் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

சீரான இடைவெளியில் சிக்ஸர் பவுண்டரி என அடித்த இவர்கள் முதல் 2வது விக்கெட்டிற்கு ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய மொயின் அலி 36 பந்துகளில் 58 ரன்களை விளாசினார். அவருடன் ஆடி வந்த டுப்ளசிஸ் 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென பந்துவீச வந்த பொல்லார்ட் டுப்ளசிஸ், சுரேஷ் ரெய்னா (2) ஆகியோரை ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார்.

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

இதனால் சென்னை அணி 116 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு - ரவீந்திர ஜடேஜா சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். குறிப்பாக அம்பத்தி ராயுடு மும்பை அணியின் பந்துவீச்சை நாளா புறமும் சிதறடித்தார்.

இலக்கு

இலக்கு

இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய அம்பத்தி ராயுடு 27 பந்துகளில் 72 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும். அவருடன் ஆடி வந்த ஜடேஜா 22 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

தொடக்கம்

தொடக்கம்

இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. ஓப்பனர்கள் டிகாக் - ரோகித் சர்மா ஜோடி அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டிற்கு 71 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 24 பந்துகளில் 38 ரன்களும், டிகாக் 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து வெளியேறினர். இதன்பின்னர் வந்த சூர்யகுமார் யாதவும் 3 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

திருப்புமுனை

திருப்புமுனை

பின்னர் ஜோடி சேர்த்த க்ருணால் பாண்டியா - பொல்லார்ட் ஜோடி சிஎஸ்கே பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தனர். குறிப்பாக கெயிரன் பொல்லார்ட் 17 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார். தொடர்ந்து ஆடிய இந்த ஜோடியில் க்ருணால் பாண்டியா 32 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டாகினார்.

த்ரில் வெற்றி

த்ரில் வெற்றி

மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிய பொல்லார்ட் தோனிக்கு தலைவலி கொடுத்து வந்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 பவுண்டரி மற்று ஒரு சிக்ஸர், ஒரு டபுள் ஓட்டம் எடுத்து அசத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. கெயிரன் பொல்லார்ட் 34 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
keiron pollard Mumbai Indians to get a thrill last ball victory against CSK
Story first published: Saturday, May 1, 2021, 21:55 [IST]
Other articles published on May 1, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X