சிஎஸ்கேவுக்கு எதிராக பிரமாஸ்திரம்.. ஸ்பெஷல் வீரரை களமிறக்கும் கேகேஆர்.. கடைசி நேர ட்விஸ்ட்!

அமீரகம்: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டிகாக வாய்ப்பே கிடைக்காமல் இருந்து வந்த முக்கிய வீரரை களமிறக்கவுள்ளது கொல்கத்தா அணி.

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி துபாயில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

ஐபிஎல்-ல் இதுவரை சிஎஸ்கே 3 முறையும், கொல்கத்தா அணி 2 முறையும் கோப்பையை வென்றுள்ளதால் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்திய டி 20 உலகக் கோப்பை அணியில் மாற்றம்.. பார்மில் இருந்த வீரர் நீக்கம்.. உள்ளே வந்த சிஎஸ்கே வீரர்இந்திய டி 20 உலகக் கோப்பை அணியில் மாற்றம்.. பார்மில் இருந்த வீரர் நீக்கம்.. உள்ளே வந்த சிஎஸ்கே வீரர்

முக்கியப் போட்டி

முக்கியப் போட்டி

இந்த போட்டியில் சிஎஸ்கேவை விட கொல்கத்தா அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் இந்த தொடரில் இதற்கு முன்னர் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி கேப்பிடல்ஸ் என முக்கிய அணிகளை அசால்டாக வென்றுவிட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்துமே பக்கா ஃபார்மில் உள்ளது.

சிரமம்

சிரமம்

எனினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டியில் சமாளிப்பது சாதாரண விஷயம் இல்லை. பல இறுதிப்போட்டிகளை கண்ட எம்.எஸ்.தோனி, எந்தவித பதற்றமும் இன்றி அணியை கொண்டு செல்வார். எனவே இதனை சமாளிக்க நிச்சயம் புதிய வியூகத்துடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்க வேண்டியுள்ளது.

கேகேஆர் மாற்றம்

கேகேஆர் மாற்றம்

கொல்கத்தா அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் டாப் ஆர்டர் மிகச் சிறப்பாக உள்ளது. வெங்கடேஷ் ஐயர் - சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு குறைந்தது 40 - 50 ரன்கள் சேர்க்கின்றனர். ஆனால் மிடில் ஆர்டரை மலமலவென சரிக்கும் வியூகத்தை தோனி வைத்திருப்பார். கடந்த சில போட்டிகளில் கூட 130+ போன்ற ஸ்கோரை துரத்த போதும் கூட கொல்கத்தா அணி கடைசி நேரங்களில் தடுமாற்றத்தை சரிந்தனர்.

பவர் ஹிட்டர் வருகை

பவர் ஹிட்டர் வருகை

எனவே மிடில் ஆர்டரில் ரன் அடித்துக்கொடுப்பதற்காக பவர் ஹிட்டரை களமிறக்க மோர்கன் திட்டமிட்டுள்ளார். அதாவது ஆண்ட்ரே ரஸலை களமிறக்கவுள்ளனர். ரஸலுக்கு காயம் ஏற்பட்டதால் கடந்த சில போட்டிகளாக அவர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சகிப் அல் ஹசன் விளையாடி வருகிறார். ஆனால் கடைசி கட்டத்தில் எப்படிபட்ட பந்தையும் சிக்ஸர் விளாசுவதற்கு ரஸல் மட்டுமே சரியாக இருப்பார். அது வெற்றிக்கும் உதவலாம் எனக்கூறப்படுகிறது. உலகக்கோப்பை முதல் ஐபிஎல் வரை என அனைத்திலும் கடைசி நேரத்தில் பவர் ஹிட்டர்ஸ் தான் வெற்றி பெற உதவியுள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
KKR Brings a Power hitter to playing 11 for Final match against CSK in IPL 2021
Story first published: Friday, October 15, 2021, 11:53 [IST]
Other articles published on Oct 15, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X