கேகேஆர் அணியில் 4வது வீரருக்கு கொரோனா. இந்திய அணியில் கிடைத்த வாய்ப்புக்கும் ஆபத்து.. தொடர் சோதனைகள்

அகமதாபாத்: கொல்கத்தா அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் இடையே கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்தியிடம் தொடங்கிய கொரோனா பாதிப்பு அடுத்தடுத்து வேகமாக பரவி வருகிறது.

அந்த ஒரு சம்பவம் போதும்.. சச்சின் - கோலி ஒப்பீடுக்கு சரியான உதாரணம்.. முன்னாள் வீரர் சுவாரஸ்ய பதிவு

இதன் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் இன்னும் 31 போட்டிகள் மீதம் உள்ளது.

கொல்கத்தா

கொல்கத்தா

ஐபிஎல் தொடரின் போது கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்தி ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் குவாரண்டைன் இருக்காமலேயே அணியின் பபுளுக்கு நுழைந்தார். இதனால் அந்த அணியில் முதலில் வருண் சக்கரவர்த்திக்கும், பின்னர் சந்தீப் வாரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 பாசிடிவ்

பாசிடிவ்

இந்நிலையில் அந்த அணியில் தற்போது 4வது வீரராக பிரசித் கிருஷ்ணாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரில் 7 போட்டிகளில் ஆடிய அவர் 8 விக்கெட்களை எடுத்தார். முன்னதாக இன்று காலை இந்த அணியை சேர்ந்த நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃப்ரெட்-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவருக்குமே 2 முறை எடுக்கப்பட்ட சோனையிலுமே பாசிடிவ் என முடிவு வந்துள்ளது.

முக்கிய வாய்ப்பு

முக்கிய வாய்ப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகாக இந்திய அணியில் இளம் வீரர் பிரசித் கிருஷ்ணாவுக்கும் இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில்தான் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் மே 25ம் தேதி இந்திய வீரர்கள் அனைவரும் பிசிசிஐ-ன் பபுளுக்கு செல்கின்றனர். எனவே அன்றைக்குள் பிரசித் கிருஷ்ணாவும் பூரண குணமடைந்து முழு உடற்தகுதி அடைய வேண்டும். இல்லையென்றால் தனது முதல் சர்வதேச போட்டிகான வாய்ப்பை இழப்பார்.

கொல்கத்தா அணி

கொல்கத்தா அணி

கொல்கத்தா அணியில் வீரர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த சூழலில் இதுவரை அடுத்தடுத்து 4 வீரர்களுக்கு அந்த அணியில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
KKR Player Prasidh Krishna tests positive for COVID 19, Fourth in the row
Story first published: Saturday, May 8, 2021, 17:02 [IST]
Other articles published on May 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X