For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிராவோ, ஹர்பஜன் இல்லை.. சிஎஸ்கேவுக்கு எதிராக டாஸ் வென்றது கொல்கத்தா! இரு அணிகளின் முக்கிய மாற்றங்கள்

மும்பை: சென்னை - கொல்கத்தா அணிகள் மோதும் போட்டியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

பேட்டிங்கிற்கு நன்கு உதவக்கூடிய இந்த பிட்ச்-ல் இரு அணிகளிலும் பவுலிங்கில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அவ்ளோ கவனக்குறைவா.. கொல்கத்தா அணி மீது வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கடும் அதிருப்தி.. செய்த தவறு என்ன? அவ்ளோ கவனக்குறைவா.. கொல்கத்தா அணி மீது வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கடும் அதிருப்தி.. செய்த தவறு என்ன?

சென்னை அணி:

சென்னை அணி:

இந்த சீசனில் இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகளை பெற்றுள்ளது. எனவே வெற்றியை தொடரவேண்டும் என்ற நோக்கில் களமிறங்கியுள்ளது. தொடக்க வீரர்களில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை அணியில் பவுலிங்கில் மட்டும் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோவுக்கு பதிலாக லுங்கி நெகிடி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 முக்கிய வீரர்

முக்கிய வீரர்

தென்னாப்பிரிக்க வீரரான லுங்கி நெகிடி, கடந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக 9 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இந்த வருடம் காலதாமதமாக அணியில் இணைந்ததால் போட்டியில் பங்கேற்காமல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அணியில் அவர் இணைந்திருப்பதால்,சிஎஸ்கேவுக்கு பவுலிங்கில் பலம் கூடியுள்ளது.

ப்ளேயிங் 11:

ப்ளேயிங் 11:

ருத்ராஜ் கெயிக்வாட், டூப்ளசிஸ், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ஜடேஜா, தோனி, லுங்கி நெகிடி, சாம் கரண், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார்

கொல்கத்தா அணி

கொல்கத்தா அணி

இந்த சீசனில் 3 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள கொல்கத்தா அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் தொடரில் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக இந்த போட்டியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக கமலேஷ் நாகர்கோட்டி சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல சகிப் அல் ஹசனுக்கு பதிலாக சுனில் நரேன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ப்ளேயிங் 11:

ப்ளேயிங் 11:

நிதிஷ் ராணா, சுப்மன் கில், ராகுல் திரிபாதி, இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக், சுனில் நரேன், ரஸல், பேட் கம்மின்ஸ், கம்லேஷ் நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி, பிரஷித் கிருஷ்ணா

Story first published: Wednesday, April 21, 2021, 19:38 [IST]
Other articles published on Apr 21, 2021
English summary
KKR won the toss against CSK, Both teams made a major changes in bowling department
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X