குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!

சென்னை: இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து பவர் ஹிட்டர் பேட்ஸ்மேன் ஒருவர் தேர்வாவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன.

PL 2021 MI vs SRH: Predictable Playing 11 | OneIndia Tamil

பஞ்சாப் அணியில் கடந்த 2021 ஐபிஎல் ஏலத்தில் ஷாருக்கான் எடுக்கப்பட்டார். பிரீத்தி ஜிந்தா அதிகம் முயற்சி செய்து 5.25 கூடி ரூபாய்க்கு இவரை எடுத்தார்.

சையது முஸ்தாக் அலி கோப்பை தொடரில் ஷாருக்கான் சிறப்பாக ஆடினார். இவரின் ஆட்டம் வைரலாகி, பெரிதும் கவனிக்கப்பட்ட நிலையில் பஞ்சாப் அணியால் இவர் எடுக்கப்பட்டார்.

முயற்சி

முயற்சி

இந்த ஏலத்தின் போதே கோலி இவரை அணியில் எடுக்க திட்டமிட்டார். பெங்களூர் அணிக்காக இவரை ஏலம் எடுக்க கோலி முயற்சி செய்தார். இவருக்காக பஞ்சாப்புடன் ஆர்சிபி அணி ஏலத்தில் கடுமையாக போட்டியிட்டது. ஆனால் கடைசியில் பஞ்சாப்தான் ஏலம் எடுத்தது.

ஏன்

ஏன்

சையது முஸ்தாக் அலி கோப்பை தொடருக்கு பின்பே கோலி இவர் மீது கண்ணாக இருந்தார். இவரை பெங்களூர் அணியில் எடுக்கலாம் என்ற முயற்சியில் இருந்தார். இந்த நிலையில்தான் நேற்று நடந்த போட்டியில் ஷாருக்கான் அதிரடியாக ஆடி அசத்தி உள்ளார்.

அசத்தல்

அசத்தல்

சென்னைக்கு எதிராக பஞ்சாப் அணியில் நேற்று ஆடிய ஷாருக்கான் 2 சிக்ஸ், 4 பவுண்டரி என்று மொத்தம் 47 ரன்கள் எடுத்தார். மற்ற பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் எல்லாம் ஆட முடியாமல், திணறி அவுட்டான நிலையில் ஷாருக்கான் மட்டும் நன்றாக ஆடினார். இவரின் ஆட்டத்தை கோலி பல வருடமாக பின் தொடர்ந்து வருகிறார்.

நடராஜன்

நடராஜன்

ஒரே சீசனில் நன்றாக ஆடி அசத்திய நடராஜனை கோலி அணியில் எடுத்தார். அதேபோல் கண்டிப்பாக ஷாருக்கனையும் கோலி எடுக்க வாய்ப்புள்ளது. நேற்று ஆட்டத்தையும் கண்டிப்பாக ஷாருக்கன் ஆட்டத்தை கோலி பார்த்து இருப்பார்.

நேற்று ஆட்டம்

நேற்று ஆட்டம்

இதனால் டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷாருக்கானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே பார்மில் ஷாருக்கான் அதிரடியாக ஆட வேண்டும். அப்படி ஆடினால், தமிழகத்தில் இருந்து பவர் ஹிட்டர் பேட்ஸ்மேனாக ஷாருக்கானை கோலி எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: Kohli may look to give an opportunity to TN finisher Shah Rukh Khan in team India
Story first published: Saturday, April 17, 2021, 13:16 [IST]
Other articles published on Apr 17, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X