For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சதம் அடிப்பதற்கு முன்னாள் இவ்வளவு பேச்சா..போட்டியின் இடையே நடந்த சுவாரஸ்ய சம்பவம்..உண்மை கூறிய கோலி

சென்னை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பட்டிக்கல் சதமடிப்பதற்கு முன்னர் நடந்த சுவாரஸ்ய நிகழ்வை கோலி கூறியுள்ளார்.

Recommended Video

Kohli பேச்சு! RCB VS RR Match இடையே நடந்த சுவாரஸ்ய சம்பவம் | Kohli-Padikkal Partnership

ராஜஸ்தான அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

45 நிமிடம்.. அப்படியே கதிகலங்கிய சிஎஸ்கே.. தோனி தந்த அட்வைஸ்.. வெற்றிக்கு பின் இருக்கும் 5 காரணங்கள்45 நிமிடம்.. அப்படியே கதிகலங்கிய சிஎஸ்கே.. தோனி தந்த அட்வைஸ்.. வெற்றிக்கு பின் இருக்கும் 5 காரணங்கள்

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்தது. இதன் பின்னர் ஆடிய ஆர்சிபி அணி 16.3 ஓவர்களில் 181/0 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதிரடி ஓப்பனிங்

அதிரடி ஓப்பனிங்

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர்கள் தொடக்க வீரர்கள் விராட் கோலி - தேவ்தத் பட்டிக்கல். சிறப்பாக ஆடிய இருவரும் எதிரணி பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் ராஜஸ்தான் பவுலர்கள் விழிப்பிதுங்கி நின்றனர். குறிப்பாக தேவ்தத் பட்டிக்கல் இந்த போட்டியில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். 52 பந்துகளை சந்தித்த அவர் 101* எடுத்தார். இதில் 6 சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும். இதே போல கேப்டன் கோலி 47 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார்.

புகழாரம்

புகழாரம்

போட்டிக்கு பின்னர் பேசிய கோலி, பட்டிக்கலின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது. எனது அணியில் ஒரு சிறந்த வீரருக்கான இடத்தை வைத்துள்ளதாக கருதுகிறேன். எதிர்காலத்தில் மிகச்சிறந்த வீரராக அவர் வருவார். கடந்த சீசனை போல இந்த சீசனிலும் சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளார்.

கோலியின் ஆசை

கோலியின் ஆசை

அவர் சதத்தை நோக்கி நகர்கையில் என்னிடம்... "இன்னும் பல சதங்கள் எனக்கு கிடைக்கும், எனவே நீங்கள் ஆட்டத்தை முடித்துவிடுங்கள் என்று கூறினார். நான் அதற்கு, நீ முதலில் சதத்தை பூர்த்தி செய் அதன் பிறகு அதனை கூறு எனக்கூறினேன். ஏனென்றால் பட்டிக்கல்லுக்கு அந்த சதம் நிச்சயம் கிடைக்க வேண்டிய ஒன்று. அவர் இந்த போட்டியில் இருந்து சிறப்பான ஆட்டத்தை தொடங்கி நம்பிக்கையுடன் அணிக்கு உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறேன் எனத் தெரிவித்தார்.

பொறுமை

பொறுமை

தனது ஆட்டம் குறித்து பேசிய கோலி, இந்த போட்டியில் நான் முதலில் அடித்து ஆடாமல் பொறுமையாக இருந்தேன். பின்னர் பிட்ச் பழகிய பிற்கு எனக்கான இடம் கிடைத்தது. டி20 போட்டியில் பார்ட்னர்ஷிப்தான் மிக முக்கியமான ஒன்று. ஒருவரால் எப்போதும் அடித்து ஆடக்கூடியவராக இருக்க முடியாது. ஒருவர் அதிரடியாக ஆடினால். மற்றொருவர் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய வேண்டும். நான் அதைதான் செய்தேன் என கோலி தெரிவித்தார்.

Story first published: Friday, April 23, 2021, 12:11 [IST]
Other articles published on Apr 23, 2021
English summary
Kohli Shares a conversation when Padikkal was nearing century against RR
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X