For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவ்வளவுதான்.. ஐபிஎல்லில் "நோ' சொன்ன அணி நிர்வாகம்.. ஜாம்பவானுக்கு கிரிக்கெட் கெரியரே ஓவர்.. பரிதாபம்

சென்னை: இந்திய அணியின் எதிர்காலமாக பார்க்கப்பட்ட குல்தீப் யாதாவிற்கு மொத்தமாக கிரிக்கெட் கெரியரே காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான லெக் ஸ்பின் பவுலர்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் குல்தீப் யாதவ். சைனா மேன் ஸ்டைல் பவுலரான இவர் தொடக்க காலத்தில் சிறப்பாக பவுலிங் செய்து வந்தார்.

ஆனால் கடந்த இரண்டு வருடமாக இவர் சரியான பார்மில் இல்லை. உலகக் கோப்பை தொடரின் போது பார்மை இழந்த குல்தீப் யாதவ் அதன்பின் பார்மிற்கு திரும்பவில்லை.

மோசம்

மோசம்

இவரின் மோசமான பார்ம் காரணமாக கடந்த சீசனிலும் கூட இவருக்கு ஐபிஎல்லில் கொல்கத்தா அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர் முழுக்க வாய்ப்பு கிடைக்காமல் சிரமப்பட்டார். ஆனால் கோலி மட்டும் இவர் மீது நம்பிக்கை வைத்து இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அணியில் எடுத்தார்.

ஆடவில்லை

ஆடவில்லை

ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் கூட இவரின் ஆட்டம் சிறப்பாக இல்லை. சரியாக பந்தை ஸ்பின் செய்ய முடியவில்லை, பந்தில் வேரியேஷன் இல்லை. முக்கியமாக பந்தை எளிதாக கணிக்கும் வகையில் வீசினார். ரன்னும் அதிகமாக கொடுத்தார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

கடந்த இரண்டு வருடமாக பார்மில் இல்லாமல் கஷ்டப்பட்ட குல்தீப் தனக்கு கிடைத்த சின்ன சின்ன வாய்ப்பை கூட சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. கோலி இவரை நம்பி முக்கியமான கட்டங்களில் வாய்ப்பு கொடுத்தும் கூட அதை காப்பாற்றிக்கொள்ளாமல் ஏமாற்றம் அளித்தார்.

கொல்கத்தா

கொல்கத்தா

தற்போது கொல்கத்தா அணியிலும் வலைப்பயிற்சியில் இவர் சரியாக ஆடவில்லை. இவரின் பவுலிங் மோசமாக இருந்ததால் நேற்று ஆடும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இவருக்கு பதிலாக ரிட்டையர் ஆன ஹர்பஜன் சிங்கை அணியில் எடுத்தனர். அந்த அளவிற்கு குல்தீப் பவுலிங் மிக மோசமாக இருந்தது

கஷ்டம்

கஷ்டம்

இதனால் இனி வரும் போட்டிகளில் குல்தீப் இப்படியே ஓரம்கட்டப்பட வாய்ப்புள்ளது. ஐபிஎல் மூலம் இவர் பார்மிற்கு திரும்பலாம் என்று நினைத்து இவர் நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் ஐபிஎல் தொடரிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் தற்போது கிரிக்கெட் கெரியரே இவருக்கு முடியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Story first published: Monday, April 12, 2021, 13:31 [IST]
Other articles published on Apr 12, 2021
English summary
IPL 2021: Kuldeep Yadav at the end of the tunnel, May not anymore chances in the team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X