8 மொழிகள், 17 சேனல்கள், 125 நாடுகளில் லைவ் - கிரிக்கெட்டின் "சூப்பர் ஸ்டாராகும்" ஐபிஎல் 2021

துபாய்: இதுவரை இல்லாத அளவுக்கு ஐபிஎல் 2021 தொடர் மிக பிரம்மாண்டமாக அமீரகத்தில் நடத்தப்பட உள்ளது.

இந்தியாவில் கட்டுக்கடங்காமல் பரவிய கொரோனா தொற்று காரணமாக, ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இப்போது ஒருவழியாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகள் நாளை (செப்.19) தொடங்கவுள்ளது.

இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இரண்டாம் கட்ட தொடர் என்றாலும், சென்னையும், மும்பையும் மோதினால் தான் அதிக அளவு பார்வையாளர்களை ஐபிஎல் நோக்கி ஈர்க்க முடியும்.

இந்த ஐபிஎல் 2021 தொடரின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் உள்ளிட்ட 8 மொழிகளில் 17 சேனல்களில் ஒளிபரப்பவுள்ளது. இது தவிர டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலும் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும். அதுமட்டுமின்றி, ஐபிஎல் 2021 ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 125 நாடுகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதுகுறித்து ஸ்டார் & டிஸ்னியின் விளையாட்டு பிரிவுத் தலைவர் சஞ்சோக் குப்தா, "டிவி மற்றும் டிஜிட்டல் தளங்களில், மிகவும் ஈர்க்கக்கூடிய மற்றும் ஐபிஎல் போட்டிகளின் அதிவேக ஒளிபரப்பை தொடர்ந்து வழங்க ஸ்டார் அண்ட் டிஸ்னி இந்தியா உறுதியாக உள்ளது. பல பிராந்திய மொழிகளில், உலகத் தரம் வாய்ந்த presentation, பார்வையாளர்களை ஈர்க்கும் அளவுக்கான வியூ அனுபவங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் என எங்களது அனைத்து முயற்சிகளும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை மகிழ்விக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 125 நாடுகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்தியாவில் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நிறுவனம், 7 மொழி களில் தொடரை ஒளிபரப்பு செய்கிறது. போட்டிகள் அனைத்தையும் இந்தியாவில் 17 ஸ்டார் நெட்வொர்க் சேனல்கள் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் லைவ் ஸ்ட்ரீம் ஆகியவற்றில் காணலாம்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி ஹெச்டி மற்றும் எஸ்டி சேனல்கள் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஃபர்ஸ்ட் ஆகியவற்றில் நேரடி ஹிந்தி ஒளிபரப்பை காணலாம்.

ஆங்கில ஒளிபரப்பை மற்ற அனைத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கட்டண சேனல்களிலும் காண முடியும்.

Tamil: Star Sports Tamil (All match days); and Vijay Super SD for the live matches on all Sundays.

அனைத்து போட்டி நாட்களிலும் "ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்" சேனலில் தமிழ் வர்ணனையுடன் போட்டியை காணலாம். விஜய் சூப்பர் எஸ்டி சேனலில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நேரடி போட்டிகளை காணலாம்.

தெலுங்கு: அனைத்து போட்டி நாட்களிலும் "ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெலுங்கு" சேனலில் தெலுங்கு வர்ணனையுடன் போட்டியை காணலாம். மா மூவிஸ் எஸ்டி மற்றும் ஹெச்டி சேனலில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நேரடி போட்டிகளை காணலாம்.

கன்னடம்: அனைத்து போட்டி நாட்களிலும் "ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கன்னடம்" சேனலில் கன்னட வர்ணனையுடன் போட்டியை காணலாம். ஸ்டார் சுவர்ணா எஸ்டி மற்றும் ஹெச்டி சேனலில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நேரடி போட்டிகளை காணலாம்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கன்னட (அனைத்து போட்டி நாட்கள்); மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நேரடி போட்டிகளுக்கு ஸ்டார் சுவர்ணா எஸ்டி மற்றும் எச்டி.

பெங்காலி: அனைத்து போட்டி நாட்களிலும் "ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெங்காலி" சேனலில் பெங்காலி வர்ணனையுடன் போட்டியை காணலாம். ஜல்ஷா மூவிஸ் எஸ்டி மற்றும் ஹெச்டி சேனலில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நேரடி போட்டிகளை காணலாம்.

மராத்தி: அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நேரடி போட்டிகளை ஸ்டார் பிரவா எஸ்டி மற்றும் ஹெச்டி சேனலில் காணலாம்.

மலையாளம்: அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நேரடி போட்டிகளை ஆசியநெட் பிளஸ் எஸ்டி சேனலில் காணலாம்.

அதேபோல், ஐபிஎல் 2021 இன் அனைத்து போட்டிகளும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்டார் வீடியோவில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும். ஆனால் அதற்காக ஐபிஎல் ரசிகர்கள் இதற்கான வருடாந்திர அல்லது மாதாந்திர சந்தாவை தேர்வு செய்ய வேண்டும்.

ஐபிஎல் 2021 தொடரை, ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஸ்கை ஸ்போர்ட்ஸ் தவிர, ஐபிஎல் 2021 ஐ ஹாட்ஸ்டார் வழியாக இங்கிலாந்திலும் கிடைக்கச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் டிஸ்னி ஹாட்ஸ்டார் இங்கிலாந்தில் ஐபிஎல் 2021 லைவ் ஸ்ட்ரீம் செய்ய திட்டமிட்டுள்ளதா இல்லையா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை.

அமெரிக்காவில் உள்ள கிரிக்கெட் பார்வையாளர்கள் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2021) நேரடி ஒளிபரப்பை வில்லோ டிவியில் பார்க்கலாம். கனடாவில் உள்ள ரசிகர்களும் ஐபிஎல் 2021 ஐ வில்லோ டிவியில் பார்க்கலாம்.

தென்னாப்பிரிக்காவில் முன்னணி நிறுவனமான சூப்பர்ஸ்போர்ட்டுடன் ஸ்டார் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், SuperSport சேனல் மூலம் ஐபிஎல் போட்டிகளை காணலாம்.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் ஐபிஎல் 2021 தொடரை BeIN ஸ்போர்ட்ஸ் சேனலில் காணலாம். அதேபோல், YuppTV மூலம் Continental ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா (சிங்கப்பூர் & மலேசியா தவிர), பாகிஸ்தான், இலங்கை, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மத்திய ஆசியா, நேபாளம், பூடான் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளில் ஐபிஎல் போட்டிகளை காணலாம். ஆஸ்திரேலியாவின் பிராந்தியத்தில் ஐபிஎல் 2021 ஐ நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையை ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது. ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸுடன் இணைந்து கயோ ஸ்போர்ட்ஸ் இங்கு ஐபிஎல் 2021 போட்டிகளை லைவ் ஸ்ட்ரீம் செய்கிறது.

ஐபிஎல்-ல் மேலும் ஒரு தமிழக பவுலர்.. அடுத்த யார்க்கர் நாயனாக வாய்ப்பு.. ஒப்பந்தம் போட்ட ஐதராபாத் அணி! ஐபிஎல்-ல் மேலும் ஒரு தமிழக பவுலர்.. அடுத்த யார்க்கர் நாயனாக வாய்ப்பு.. ஒப்பந்தம் போட்ட ஐதராபாத் அணி!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021 LIVE Broadcast 8 language 17 channels live - ஐபிஎல்
Story first published: Saturday, September 18, 2021, 20:58 [IST]
Other articles published on Sep 18, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X