"இவங்களை வச்சுக்கிட்டு என்ன பண்றது".. சிஎஸ்கேவை விடாமல் துரத்தும் பிரச்சினை.. சிக்கலில் மாட்டிய தோனி!

சென்னை: சிஎஸ்கே அணியில் மாற்று வெளிநாட்டு பாஸ்ட் பவுலர்கள் இல்லாமல் தோனி கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார். அடுத்த போட்டியிலும் இந்த சிக்கல் நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. சென்னை அணியில் பேட்டிங் நன்றாக இருந்தாலும் பவுலிங் சொதப்பிய காரணத்தால் அந்த போட்டியில் தோல்வி அடைந்தது.

சென்னை அணியின் தோல்விக்கு மாலை நேரத்தில் பெய்த பனி ஒரு காரணமாக இருந்தது. இன்னொரு பக்கம் மும்பை பிட்ச் ஒரு காரணமாக அமைந்தது.

மும்பை பிட்ச் எப்படி

மும்பை பிட்ச் எப்படி

பொதுவாக மும்பை பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். இங்கு எளிதாக அதிக ரன் எடுக்கலாம். இங்கு ரன் செல்வதை கட்டுப்படுத்த நல்ல வெளிநாட்டு பவுலர் தேவை. அதிக வேகத்தில் வீச கூடிய பவுலர் தேவை.

பவுன்சர்

பவுன்சர்

நன்றாக பவுன்சர், உடலை நோக்கி செல்லும் பந்துகளை வீச கூடிய வீரர்கள் தேவை. மும்பை அணி இதனால்தான் போல்ட், பும்ரா போன்ற வீரர்களை அணியில் வைத்து இருந்தது. ஆனால் சிஎஸ்கே அணியில் அப்படி சிறப்பாக பவுலிங் செய்ய கூடிய வெளிநாட்டு பவுலர்கள் தற்போது இல்லை.

வெளியேறிவிட்டார்

வெளியேறிவிட்டார்

அணியில் இருந்த ஹஸல்வுட் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். அவருக்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட பெஹன்டிராப் இன்னும் மும்பைக்கு வந்து சேரவில்லை. லுங்கி நிகிடி இன்னும் மும்பைக்கு வரவில்லை, இவர்கள் வந்த பின் தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும். இதனால் அடுத்த போட்டியில் இவர்கள் ஆட மாட்டார்கள்.

சிக்கல்

சிக்கல்

இதனால் அடுத்த போட்டியிலும் இருக்கிற பவுலர்களை வைத்தே சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது. ஹசல்வுட் போனதும் அவருக்கு உடனடியாக மாற்று பவுலரை எடுக்காமல் சிஎஸ்கே தாமதம் செய்தது. இந்த தாமதம் தற்போது சிஎஸ்கேவிற்கு எதிராக திரும்பி உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: Lungi and Behendroff availability may cause more issues to CSK in next match
Story first published: Monday, April 12, 2021, 11:06 [IST]
Other articles published on Apr 12, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X