மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஹர்திக் & ரோகித்திற்கு என்ன ஆனது.. பயிற்சியாளர் விளக்கம்!

அமீரகம்: சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா ஏன் சேர்க்கப்படவில்லை என்பது குறித்து அணி நிர்வாகம் பதிலளித்துள்ளது.

Mumbai Indians Head Coach Explains Why Hardik Pandya Missed CSK Match | Oneindia Tamil

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி கடந்த ஞாயிற்று கிழமையன்று துபாய் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.

இந்த தொடரின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பொல்லார்டு தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

ஐபிஎல் ஒளிபரப்புக்கு சிக்கல்.. தாலிபான்கள் அனுப்பிய சுற்றறிக்கை.. காரணத்தை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்ஐபிஎல் ஒளிபரப்புக்கு சிக்கல்.. தாலிபான்கள் அனுப்பிய சுற்றறிக்கை.. காரணத்தை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்

முன்னனி வீரர்கள் இல்லை

முன்னனி வீரர்கள் இல்லை

இதில் மும்பை அணி யாருமே எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்திருந்தது. அந்த அணியின் முக்கிய வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் விளையாடவில்லை. அவர்கள் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவானது. தொடக்கத்தில் பேட்டிங்கில் சொதப்பிய சென்னை அணி கடைசி சில ஓவர்களில் சிக்ஸர்களை பறக்கவிட்டது.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

மும்பை அணியின் பந்துவீச்சை நன்கு அறிந்துக்கொண்டதால் சிஎஸ்கேவின் ருத்ராஜ் கெயிக்வாட்டை எந்தவொரு வீரராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்த இடத்தில் ஹர்திக் இருந்திருந்தால் நிச்சயம் மிகப்பெரும் திருப்புமுணையை ஏற்படுத்தியிருப்பார் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மும்பை அணி விளக்கம்

மும்பை அணி விளக்கம்

இந்நிலையில் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா ஏன் கலந்துக்கொள்ளவில்லை என்றும் அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே விளக்கமளித்தார். அதில் அவர், ஹர்திக் பாண்டியா பயிற்சி போட்டிகளின் கலந்து கொண்டு சிறப்பாக தான் செயல்பட்டார். அப்போது அவருக்கு திடீரென சிறிய தசைப்பிடிப்பு ஏற்பட்டுவிட்டது.

நம்பிக்கை

நம்பிக்கை

எனவே போட்டியில் அவர் விளையாடி தசைப்பிடிப்பு அதிகமாகிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக தான் நாங்கள் இந்த போட்டியில் அவரை விளையாட வைக்கவில்லை. இன்னும் சிறிது நாட்கள் அவர் ஓய்வு எடுத்தால் நிச்சயம் அடுத்த போட்டிக்கு சிறப்பாக தயாராகி விடுவார் என்று ஜெயவர்த்தேனே குறிப்பிட்டார்.

ரோகித்தின் நிலை

ரோகித்தின் நிலை

இதே போல ரோகித் சர்மாவுக்கு என்ன ஆனது என்பது குறித்தும் ஜெயவர்தனே பேசியுள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரை முடித்துக்கொண்டு நேரடியாக அமீரகம் பயணித்த ரோஹித்திற்கு டி20 தொடரில் விளையாடும் மனநிலை வேண்டும். எனவே அவருக்கு சில தினங்கள் ஓய்வு கொடுத்தால் அடுத்த போட்டியில் இருந்து பங்கேற்பார் என்று கூறியிருந்தார்.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 கணிப்புகள்
Match 8 - October 20 2021, 07:30 PM
இலங்கை
அயர்லாந்து
Predict Now
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Mahela Jayawardene Reveals the reason for why Hardik missed in clash against CSK
Story first published: Tuesday, September 21, 2021, 17:55 [IST]
Other articles published on Sep 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X