For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதவிட வேற என்ன வேணும்.. ஐபிஎல்-ல இல்லனாலும் பாராட்ட மறக்கல..நெகிழ்ச்சியில் மும்பை அணியின் இளம் வீரர்

சென்னை: நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மும்பை அணியின் அறிமுக வீரர் மார்கோ ஜான்சென், தனக்கு வாழ்த்து தெரிவித்த முக்கிய வீரருக்கு நன்றி மறக்காமல் நன்றி கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற மும்பை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் மும்பை அணி தோல்வியடைந்தாலும், அந்த அணியின் இளம் வீர்ர மார்கோ ஜான்செனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மார்கோ ஜான்சென்

மார்கோ ஜான்சென்

தென்னாப்பிர்க்காவை சேர்ந்த 20வயது இளம் வீரர் மார்கோ ஜான்சென் நேற்று மும்பை அணிக்காக தனது முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார். 20 வயதிலேயே இவர் தென்னாப்பிரிக்காவின் முதல் தர வீரர் ஆவார். ஆனால் இதுவரை சர்வதேச போட்டிகளில் இவர் ஆடியது இல்லை. எனினும் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான தொடரில் வலைப்பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டதால் ஐபிஎல்-ல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதல் போட்டி

முதல் போட்டி

முதல் ஓவரில் அவர் சற்று தடுமாறிய போதும், அடுத்தடுத்த ஓவர்களில் கம்பேக் கொடுத்தார். இதனால் முதல் போட்டியில் அவர் 4 ஓவர்கள் வீசி வெறும் 28 ரன்களையே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை சாய்த்தார். இவர் வீழ்த்திய 2 விக்கெட்டும் பெங்களூரு அணியின் முக்கிய வீரர்களாக பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் மற்றும் சபாஷ் அக்மது ஆகும். இதனால் தனி கவனம் பெற்றார்.

ஸ்டெயின்

ஸ்டெயின்

மார்கோ ஜான்செனின் ஆட்டம் குறித்து சக நாட்டு முன்னணி வீரர் டேல் ஸ்டெயின் பாராட்டியுள்ளார். இதுகுறித்த அவரது ட்வீட்டில், சிறப்பான ஆட்டம் மார்கோ ஜான்சென், உனது அணி தோல்வி அடைந்தாலும், நீ உனது ஆட்டம் குறித்து பெருமை கொள்ள வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜான்சென் நன்றி

ஜான்சென் நன்றி

இந்நிலையில் அதுகுறித்து பதிலளித்துள்ள மார்கோ ஜான்சென், டேல் ஸ்டெயினுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அவர் எனது ஆட்டத்தை பார்த்து நல்ல வார்த்தைகளை கூறியுள்ளார். நான் ஆட்டத்தில் தாக்கத்தில் ஏற்படுத்தினேன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன் எனத்தெரிவித்துள்ளார்.

தாக்கம்

தாக்கம்

மேலும், அவர், நான் முதல் பந்தை வீசும் போது அதிக பதற்றமாக இருந்தது. ஆனால் அது நம்பிக்கை தரும் பதற்றம் தான். முதல் ஓவர் பெரிய அளவில் இல்லை. எனினும் அடுத்த ஓவர்களில் கம்பேக் கொடுத்து ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினேன் என்பது பெருமை கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, April 10, 2021, 19:22 [IST]
Other articles published on Apr 10, 2021
English summary
Marco Jansen has thanked Dale Steyn for saying good things about him after first match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X