For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிக்கலுடன் களமிறங்கும் ஆர்சிபி....மும்பை அணிக்கு அதிர்ஷ்டம் தான்...முதல் போட்டிக்கான முழு விவரங்கள்!

சென்னை: ஐபிஎல் தொடருக்கான பரபரப்பு எகிறிவிட்ட நிலையில் முதல் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட், ப்ளேயிங் 11 குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டுகான ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்து 5 மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் இந்தாண்டுகான ஐபிஎல் தொடர் நாளை தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும் - பெங்களூரு அணியும் மோதுகிறது.

இரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி, அதில் மும்பை 17 முறையும், பெங்களூரு 9 முறையும் வென்றுள்ளது. இந்நிலையில் நாளைய போட்டியில் இரு அணிகளும் பல மாற்றங்களுடன் களமிறங்குகிறது.

பிட்ச் ரிப்போர்ட்

பிட்ச் ரிப்போர்ட்

முதல் போட்டியானது சென்னை MA சிதம்பரம் மைதானத்தில் 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. வழக்கமாக இந்த பிட்ச்சானது பேட்ஸ்மேன்களுக்கு சிறிது சிரமான ஒன்றே ஆகும். ஏனென்றால் ஸ்பின்னர்களுக்கு மிகவும் கைக்கொடுக்கூடிய பிட்ச் இது. இதனால் இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி 150 ரன்கள் எடுத்தாலே ஓரளவிற்கு வெற்றி பெறலாம் என கூறப்படுகிறது.

மும்பை அணி

மும்பை அணி

ரோகித் சர்மா ( கேப்டன்) , கிறிஸ் லின், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ( கீப்பர்) , கெயிரின் பொல்லார்ட், ஹர்த்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, நாதன் கோல்டர் நை/ பியூஸ் சாவ்லா, ராகுல் சஹார். ட்ரெண்ட் போல்ட், பும்ரா,

பெங்களூரு அணி

பெங்களூரு அணி

தேவ்தத் பட்டிக்கல், விராட் கோலி ( கேப்டன்) டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், ராஜட் பட்டிதர்/ முகமது அசாருதீன், சச்சின் பேபி/ சுயாஷ் பிரபுதேசாய், டேனியல் கிரிஸ்டியன், வாசிங்டன் சுந்தர், கெயில் ஜேமிசன்/ கேன் ரிச்சர்ட்சன், முகமது சிராஜ், யுவேந்திர சஹால்

கணிப்பு

கணிப்பு

விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியில் பல வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால் அணி இன்னும் செட்டில் ஆகவில்லை. சிறப்பான அயல் நாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ள போது அவர்கள் ஐபிஎல் அனுபவம் இல்லாத வீரர்கள். ஆனால் நடப்பு சாம்பியனான மும்பை அணியில் கடந்த முறை இருந்த வீரர்கள் செட்டிலாகி இன்னும் அணியில் உள்ளனர். எனவே மும்பை அணியை எதிர்கொள்ள ஆர்சிபி சற்று திணறும் என்பதால் மும்பைக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Story first published: Thursday, April 8, 2021, 22:36 [IST]
Other articles published on Apr 8, 2021
English summary
Predicted Playing XI, match prediction,and pitch report for IPL 2021 Match 1 RCB vs MI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X