பஞ்சாப் ஓப்பனர்கள் காட்டடி.. தடுமாறிய எதிரணி பவுலர்கள்.. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இமாலய இலக்கு!

மும்பை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி ஆட்டத்தால் 196 என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

டெல்லி கேப்பிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களை எடுத்துள்ளது.

ஆட்டத்தை மாற்றிய ஸ்மித்தின் சிறிய தவறு விழிப்பிதுங்கி நின்ற ரிஷப் பண்ட்.. வாய்ப்பு கொடுத்தற்கு ஆப்பா

ஓப்பனிங்

ஓப்பனிங்

டாஸ் வென்ற டெல்லி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்கமே அதிரடி காத்திருந்தது. ஓப்பனிங் களமிறங்கிய மயங்க் அகர்வால் - கே.எல்.ராகுல் ஜோடி முதல் ஓவர் முதலே அதிரடி காட்டினர்.

அதிரடி

அதிரடி

சிறப்பாக ஆடிய இந்த ஜோடி 5 ஓவர்களில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தது. அதே போல் பவர் ப்ளேவின் முடிவில் 59 ரன்கள் சேர்ந்தது. இவர்களை பிரிக்க முடியாமல் திணறிய டெல்லி அணியின் பந்துவீச்சாளர் ரன்களை வாரி வழங்கினர்.

பஞ்சாப் அணிக்கு அதிர்ஷ்டம்

பஞ்சாப் அணிக்கு அதிர்ஷ்டம்

ஆட்டத்தின் 2வது ஓவரிலேயே ராகுல் அவுட்டாக வாய்ப்பிருந்தது. ஆனால் ஸ்மித் கேட்சை தவறவிட்டதால் பஞ்சாப் கிங்ஸ் அணியில் முதல் விக்கெட்டிற்கு 122 ரன்கள் சேர்ந்தது. சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் 36 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். அதே போல் கே.எல்.ராகுல் 61 ரன்கள் விளாசினார்.

கடின இலக்கு

கடின இலக்கு

இதனையடுத்து களமிறங்கிய கெயில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 ரன்களுக்கு வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய தீபக் ஹூடா (22) நிக்கோலஸ் பூரண் (9), ஷாருக்கான் (15) ரன் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Mayank agarwal, KL rahul helps Punjab kings to set a huge target to Delhi Capitals
Story first published: Sunday, April 18, 2021, 21:34 [IST]
Other articles published on Apr 18, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X