‘யுவ்ராஜ் சிங்கின் சாதனையை செய்வேன்’.. க்ருணால் பாண்ட்யாவின் ஆசை.. கோபத்தில் திட்டும் ரசிகர்கள்!

அமீரகம்: நேற்றைய போட்டியின் போது க்ருணால் பாண்ட்யா, தான் படைக்க ஆசைப்படும் சாதனை குறித்து பேசியது ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

Yuvraj SInghன் சாதனையை செய்வேன்! Krunal Pandya ஆசை | IPL 2021 | OneIndia Tamil

ஐபிஎல் தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் நேற்று மும்பை - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் மும்பை அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 155 ரன்களை குவித்தது. இதன் பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 159 ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது.

 MI vs KKR: ஹர்திக் பாண்ட்யா மீண்டும் அணியில் இருந்து நீக்கம்.. பதில் சொல்லாமல் ரோஹித் MI vs KKR: ஹர்திக் பாண்ட்யா மீண்டும் அணியில் இருந்து நீக்கம்.. பதில் சொல்லாமல் ரோஹித்

ஐபிஎல் ஆட்டம்

ஐபிஎல் ஆட்டம்

மும்பை அணியில் ஓப்பனிங் ஜோடி ரோகித் சர்மா மற்றும் டிகாக் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்த போதும் அதனை மிடில் ஆர்டர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. எனினும் தட்டுத்தடுமாறி 156 என்ற நல்ல இலக்கை நிர்ணயித்தது. ஆனால் கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 15.5 ஓவர்களில் எளிதாக கதையை முடித்தனர். விக்கெட் எடுக்க முடியாமல் மும்பை பவுலர்கள் திணறினர். இதில் குறிப்பாக க்ருணால் பாண்ட்யா மீது அதிக கோபத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

மோசமான ஃபார்ம்

மோசமான ஃபார்ம்

சுத்தமாக ஃபார்மில் இல்லாத க்ருணால் பாண்ட்யாவுக்கு, மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவது ஏன்? என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தாண்டு ஐபிஎல்-ல் இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 3 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார். குறிப்பாக கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட இல்லை. பேட்டிங்கிலும் பெரிய ஃபார்மில் இல்லை. சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்களும், நேற்றைய ஆட்டத்தில் 12 ரன்களும் தான் எடுத்தார்.

க்ருணால் பாண்ட்யா ஆசை

க்ருணால் பாண்ட்யா ஆசை

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின் போது க்ருணால், தனது ஆசையை தெரிவித்துள்ளார். அதில், ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. விரைவில் அதனை நான் செய்து காட்டுவேன் என தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை சில வீரர்கள் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். யுவ்ராஜ் சிங், பொல்லர்ட், கிப்ஸ் உள்ளிட்டோர் இதில் புகழ்பெற்றவர்கள்.

விமர்சனம்

விமர்சனம்

ஐபிஎல் தொடரில் ரன் குவிக்கவே சிரமப்பட்டு வரும் க்ருணால் பாண்ட்யா மீது ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். இதில் அவர் 6 பந்துகளில் தொடர்ந்து 6 சிக்ஸர்களை விளாச வேண்டும் எனக் கோரியது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
MI player Krunal Pandya Wants to Emulate the Feat Achieved by Yuvraj Singh
Story first published: Friday, September 24, 2021, 11:21 [IST]
Other articles published on Sep 24, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X