இன்றைய போட்டியில் ரோகித், ஹர்தித் இருப்பார்களா?.. ட்ரெண்ட் போல்ட் கொடுத்த தகவல்.. ரசிகர்கள் குழப்பம்

அமீரகம்: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பங்குபெறுவார்களா என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

ஐபிஎல் தொடரின் 34 வது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி அபுதாபியில் நடைபெறவுள்ளது.

யோவ் என்னயா பன்ற.. 'அதிரடி வீரர்’ கேதர் ஜாதவ் எடுத்த தைரியமான முடிவு.. மோசமாக கிண்டலடித்த ரசிகர்கள்!யோவ் என்னயா பன்ற.. 'அதிரடி வீரர்’ கேதர் ஜாதவ் எடுத்த தைரியமான முடிவு.. மோசமாக கிண்டலடித்த ரசிகர்கள்!

இந்த தொடரில் 8 போட்டிகளில் 4 தோல்வியை சந்தித்துள்ள மும்பை அணிக்கு இது முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. அதே வேளையில் கொல்கத்தா அணியும் 8 போட்டிகளில் 3 வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

கடைசி போட்டி

கடைசி போட்டி

இந்த தொடரில் கடைசியாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி மோசமான தோல்வியை பெற்றிருந்தது. இந்த போட்டியில் மும்பை அணி யாருமே எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்திருந்தது. அந்த அணியின் முக்கிய வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் விளையாடவில்லை.

அவர்கள் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவானது.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

தொடக்கத்தில் பேட்டிங்கில் சொதப்பிய சென்னை அணி கடைசி சில ஓவர்களில் சிக்ஸர்களை பறக்கவிட்டது. மும்பை அணியின் பந்துவீச்சை நன்கு அறிந்துக்கொண்டதால் சிஎஸ்கேவின் ருத்ராஜ் கெயிக்வாட்டை எந்தவொரு வீரராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்த இடத்தில் ஹர்திக் இருந்திருந்தால் நிச்சயம் மிகப்பெரும் திருப்புமுணையை ஏற்படுத்தியிருப்பார் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பயிற்சியாளர் விளக்கம்

பயிற்சியாளர் விளக்கம்

இதுகுறித்து பேசியிருந்த மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே, ஹர்திக் பாண்டியா பயிற்சி போட்டிகளின் போது சிறிய தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டார். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக தான் நாங்கள் இந்த போட்டியில் அவரை விளையாட வைக்கவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரை முடித்துக்கொண்டு நேரடியாக அமீரகம் வந்துள்ளதால் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது எனக்கூறினார்.

போல்ட் சொன்ன தகவல்

போல்ட் சொன்ன தகவல்

இந்நிலையில் ரோகித் மற்றும் ஹர்திக் பாண்ட்யா இன்றைய போட்டியில் விளையாடுவார்களா என்பது குறித்து ட்ரெண்ட் போல்ட் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், இருவரும் உடல்நிலை தேறி வருகின்றனர். அடுத்த போட்டியில் அவர்கள் தேர்வாவார்களா என்பது தெரியவில்லை. ஆனால் நாளுக்கு நாள் அவர் முன்னேற்றமடைந்துக் கொண்டே தான் உள்ளனர். அவர்கள் மிக முக்கியமான வீரர்கள். எனவே அவர்களை அடுத்த போட்டியில் கொண்டு வரதான் அணி முயற்சிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 கணிப்புகள்
Match 8 - October 20 2021, 07:30 PM
இலங்கை
அயர்லாந்து
Predict Now
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
MI's Trent Boult gives an update on Rohit Sharma and Hardik Pandya's availability against KKR in IPL 2021
Story first published: Thursday, September 23, 2021, 13:14 [IST]
Other articles published on Sep 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X