For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய இளம் வீரர்.. இப்படி நடந்ததே இல்லை!

சென்னை: மும்பை அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீச்சிய பெங்களூரு அணி வீரர் ஹர்ஷல் பட்டேல் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

Recommended Video

RCB-யின் 'ரட்சகன்' Harshal Patel.. உருக்கமான கதை! | Oneindia Tamil

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு - மும்பை அணிகள் மும்முறுமாக ஆடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி இறுதி கட்டத்தில் சரிந்தது.

இதற்கு காரணம் பெங்களூரு அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இளம் வீரர் ஹர்ஷல் பட்டேல் தான் ஆகும்.

முதல் போட்டி

முதல் போட்டி

கடந்த முறை அயல்நாட்டில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி மிகுந்த பாதுகாப்புடன் இன்று சென்னையில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. மும்பை அணி முதலில் ஆக்ரோஷமாக ஆடிய போதும் இறுதியில் திணறியது.

அசத்தல் பவுலிங்

அசத்தல் பவுலிங்

இதற்கு காரணம் ஆர்சிபி அணியின் புதுமிக வீரர் ஹர்ஷத் பட்டேல் தான். புது வீரர் என சாதாரணமாக மும்பை பேட்ஸ்மேன்கள் முதலில் நினைத்த நிலையில் அடுத்தடுத்த ஓவர்களில் மொத்தம் 5 விக்கெட்கள் எடுத்து மிரளவைத்தார். முதல் 2 ஓவரில் 2 விக்கெட் எடுத்த ஹர்ஷல் பட்டேல், கடைசி ஓவரில் 3 விக்கெட் எடுத்தார். இவரின் வேகத்தில் மும்பையின் அதிரடி வீரர்கள் இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், குர்ணால் பாண்டியா ஆகியோர் சரிந்தனர். 4 ஓவர்கள் வ

பல்வேறு சாதனைகள்

பல்வேறு சாதனைகள்

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணிக்கு எதிராக ஒரே போட்டியில் 5 விக்கெட்கள் எடுத்தவர் என்ற பெருமையை பெற்றார். ஆர்சிபி அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒரு வீரர் 5 விக்கெட்களை எடுத்துள்ளார். அதே போல ஐபிஎல் வரலாற்றில் தொடரின் முதல் போட்டியிலேயே ஒரு வீரர் 5 விக்கெட்கள் எடுப்பது இதுவே முதல் முறையாகும்.

ஹர்ஷல்

ஹர்ஷல்

இந்த சாதனைகளோடு நிற்காமல் மேலும் ஒரு சாதனை உள்ளது. சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஒரு வீரர் ஐபிஎல்-ல் ஒரே போட்டியில் 5 விக்கெட்களை எடுப்பது இது முதல் முறையாகும். மும்பை அணியின் ஸ்கோர் 190 - 200 வரை செல்லும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இவரின் அபார பந்துவீச்சு மும்பை அணியின் ஸ்கோரை 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.

Story first published: Friday, April 9, 2021, 22:48 [IST]
Other articles published on Apr 9, 2021
English summary
Harshal Patel Bags His Maiden Five-Wicket Haul and sets big record in match against MI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X