ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்!

மும்பை: தடைபட்டுள்ள ஐபிஎல் தொடர் இந்த வருட இறுதியில் மீண்டும் நடைபெறும் என கூறப்படும் நிலையில் அதிலும் ஒரு ஷாக்கிங் நியூஸ் கொடுத்துள்ளார் முன்னாள் வீரர் ஒருவர்.

IPL-ஐ நடத்த BCCI போடும் திட்டம்.. ஆனால் அதற்க்கு எல்லாம் சரியா நடக்கணும்

கடும் பாதுகாப்புகளுடன் இருந்த வீரர்களுக்கு நேற்று முன் தினம் முதல் அடுத்தடுத்து கொரோனா தொற்று பாதித்தது. இதுவரை வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 8 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் போட்டிகள் மீண்டும் தொடரவிருக்கும் தேதி குறித்து எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை.

ரூ.100 கோடி தரணும்..நஷ்டம் அடைந்ததாக கூறி மழுப்பும் பிசிசிஐ..பாய்ண்ட் போட்டு விளாசிய முன்னாள் வீரர்

மீண்டும் ஐபிஎல்

மீண்டும் ஐபிஎல்

இதுவரை 29 லீக் போட்டிகள் நடைபெற்று இருக்கும் நிலையில் இன்னும் 31 போட்டிகள் உள்ளன. இவை டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அல்லது பின்னராக நடத்தப்படும் எனக்கூறப்படுகிறது. உலகக்கோப்பையானது இந்தாண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடத்தப்படவுள்ளது.

குறைந்த வாய்ப்பு

குறைந்த வாய்ப்பு

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வாய்ப்பு குறைவு என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் ஆத்தர்டான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஐபிஎல் தொடர் உலகின் மிகமுக்கியமான தொடர்தான். ஆனால் மீண்டும் நடைபெறுவதில் கால சிக்கல்கள் உள்ளன. இந்த தொடரில் இந்திய வீரர்கள் மட்டும் ஆடவில்லை. அயல்நாட்டு வீரர்களும் அவசியம். அவர்களையும் வரவழைப்பது பிசிசிஐக்கு சிரமம்தான்

சர்வதேச தொடர்கள்

சர்வதேச தொடர்கள்

ஐபிஎல்-ஐ மீண்டும் நடத்த இந்தாண்டில் நாட்கள் உள்ளதாக எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக ஜூலை மாதத்தில் இங்கிலாந்து செல்கிறது. அங்கு 5 போட்டிகள் முடிய செப்டம்பர் 15 போல ஆகிவிடும். இது முடிந்தவுடனே நியூசிலாந்து அணி இந்தியா வருகை தந்து டி20 தொடரில் பங்கேற்கிறது. அதன்பிறகு அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை வந்துவிடும்.

டி20 உலாக்கோப்பை

டி20 உலாக்கோப்பை

ஒரு வேளை ஐபிஎல் போட்டிகள் உலகக்கோப்பைக்கு முன்னதாக நடத்தலாம். ஆனால் அனைத்து நாடுகளும் உலகக்கோப்பைக்கு தயாராகும் நேரம் அது. உதாரணத்திற்கு இங்கிலாந்து அணி வங்கதேசம், பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அந்த நேரத்தில் வீரர்கள் வந்தாலும், அவர்களுக்கு பயோபபுள் பிரச்னை பெரிதாக இருக்கும். எனவே ஒரு தொடருக்காக வீரர்கள் நீண்ட காலம் பயோ பபுளில் சிக்க நேரிடும் எனத்தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Michael Atherton Points out the Difficulities for IPL rescheduling
Story first published: Wednesday, May 5, 2021, 22:13 [IST]
Other articles published on May 5, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X