For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் ஜடேஜா? ஆதரவு தெரிவித்த மைக்கேல் வாகன்.. பின்னணி

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த கேப்டன் யார் என்ற விவகாரம் சென்று வரும் நிலையில் ஜடேஜா பெயரை உள்நுழைத்துள்ளார் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன்.

Recommended Video

'Dhoni-க்குப் பிறகு CSK-வின் Captain ஆகும் தகுதி Jadeja-வுக்கு இருக்கிறது'-Michael Vaughan

சென்னை அணியின் கேப்டனாக தோனி நேற்று 200வது போட்டியில் களம் கண்டார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது சாதாரணமானது அல்ல.. சிஎஸ்கே அணியின் செயல்பாடு.. முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் எச்சரிக்கை! இது சாதாரணமானது அல்ல.. சிஎஸ்கே அணியின் செயல்பாடு.. முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் எச்சரிக்கை!

இந்நிலையில் தோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் யார் என்ற பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. இதில் ஜடேஜாவின் பெயர் அடிபட்டுள்ளது.

தோனி

தோனி

சென்னை அணிக்கு கடந்த 2008ம் ஆண்டு முதல் எம்.எஸ்.தோனி செயல்பட்டு வருகிறார். இதுவரை 200 போட்டிகளில் அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள அவர் 110 போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார். இதுவரை 3 முறை ஐபிஎல் கோப்பைகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.

ஓய்வு எப்போது?

ஓய்வு எப்போது?

கடந்தாண்டு சர்வதேச தொடர்களில் இருந்து ஓய்வு பெற்ற அவர், ஐபிஎல் போட்டிகளிலும் பேட்டிங்கில் திணறி வருகிறார். இதனால் அவர் இந்தாண்டு ஓய்வு அறிவிப்பார் என கூறப்பட்டது. ஆனால் சென்னை அணி தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அதற்கு மறுப்பு தெரிவித்து, தோனி தொடர்ந்து விளையாடுவார் என தெரிவித்தார். இந்நிலையில் தோனியின் ஓய்வுக்கு பிறகு ஜடேஜாவை மையப்படுத்தி அணியை உருவாக்க வேண்டும் என வாகன் தெரிவித்துள்ளார்.

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா

இதுகுறித்து பேசியுள்ள மைக்கேல் வாகன், தோனி இன்னும் 2 - 3 ஆண்டுகள் விளையாடுவார் என நீங்கள் சொல்லலாம், ஆனால் உண்மையை பார்த்தால் அப்படி இல்லை. எனவே புதிய தலைமையின் கீழ் அணியை உருவாக்க வேண்டும். அதன்படி ஜடேஜாவின் தலைமையில் அணியை அமைத்தால் சிறப்பாக இருக்கும். அவர் பேட்டிங், பவுலிங், ஆட்டத்தின் மனநிலை மிக நன்றாக உள்ளது.

சிறந்த வீரர்

சிறந்த வீரர்

ஜடேஜாவிடம் நீங்கள் 4 - 5வது வீரராக இறங்க சொல்லலாம், அல்லது முன்கூட்டியே இறங்க சொல்லலாம், அவரிடம் தொடக்கத்திலேயே பவுலிங் வீசவும் சொல்லலாம், முக்கிய இடங்களில் ஃபீல்டிங்கிற்கு பயன்படுத்தலாம். அவர் அனைத்திற்கு தயாராக இருப்பார். என்னை பொறுத்தவரை அவர் சிறந்த வீரர் என்று நினைக்கிறேன்.

இளம் வீரர்

இளம் வீரர்

சென்னை அணி சாம் கரண் தலைமையில் அணியை அமைப்பதற்கு முயற்சிப்பதாக தெரிகிறது. ஆனால் அவர் மிகவும் இளம் வீரர். அவர் பெரியளவிலான பிரஷரை கையாள்வதற்கு தயாராகவில்லை. அவர் ஒரு தலைமைக்கு கீழ் விளையாடும் போது தான் சிறப்பாக இருப்பார் என்று தோன்றுகிறது என தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, April 20, 2021, 16:59 [IST]
Other articles published on Apr 20, 2021
English summary
Michael Vaughan Suggestion on CSK to build the team around Ravindra Jadeja
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X