For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

144..145.. விஸ்வரூபம் எடுத்த இளம் வீரர்.. 2021 ஐபிஎல்லில் இவர்தான் பெஸ்ட் பவுலர்.. நம்பவே முடியல!

சென்னை: நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இளம் வீரர் சிராஜ் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார்.

ஐபிஎல் தொடரின் தொடக்க காலங்களில் கடுமையாக விமர்சனங்களை சந்தித்த இளம் வீரர்தான் முகமது சிராஜ். முக்கியமாக இவர் அதிக ரன்களை வாரி வழங்கியதால் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டார். பெங்களூர் அணியின் தோல்விக்கு பல முறை காரணமாக இருந்தார்.

இந்த ஒரு அரைசதத்துக்காக 5 வருஷம் காத்திருக்க வச்சுட்டீங்களே மேக்ஸ்வெல்... ஆர்சிபி நம்பிக்கை வீணாகல! இந்த ஒரு அரைசதத்துக்காக 5 வருஷம் காத்திருக்க வச்சுட்டீங்களே மேக்ஸ்வெல்... ஆர்சிபி நம்பிக்கை வீணாகல!

கடந்த சீசன் ஐபிஎல் போட்டியில் கூட சிராஜ் அதிக அளவு ரன்களை வாரி வழங்கினார். பல போட்டிகளில் கேப்டன் கோலியே சிராஜ் மீது கோபம் அடைந்தார்.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

ஆனால் அதன்பின் நடந்த ஆஸ்திரேலிய தொடரில்தான் சிராஜ் மொத்தமாக மாறினார். பும்ரா காயத்தோடு வெளியேற இந்திய அணியின் பவுலிங்கை சிராஜ்தான் வழி நடத்தினார். அந்த தொடரில் சிராஜ்தான் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தார். ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த சிராஜ் முக்கிய காரணமாக இருந்தார்.

காரணம்

காரணம்

ஒரே மாதத்தில் மோசமான வீரர் என்ற பெயரில் இருந்து சிராஜ் நம்பிக்கை நட்சத்திரம் என்ற உயரத்திற்கு சென்றார். ஆனால் அப்போதும் கூட இவர் டெஸ்ட் வீரர், ஐபிஎல்லில் மீண்டும் சொதப்புவார் பாருங்கள் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் 2021 ஐபிஎல்லில் பெங்களூர் ஆடிய இரண்டு போட்டிகளிலும் அந்த அணிக்காக சிறப்பாக பவுலிங் செய்தது சிராஜ்தான்.

சிராஜ்

சிராஜ்

துல்லியமான லென்த், லைன், பல வெரியேஷன்கள் என்று சிராஜ் எதிர்பார்க்காத மாற்றத்தை தனது பவுலிங்கில் காட்டி வருகிறார். அதிலும் நேற்று போட்டியில் இவர் 144, 145 கிமீ வேகத்தில் அடுத்தடுத்து பவுலிங் செய்து அதிர வைத்தார். பும்ரா, ஷமியே 142 கிமீ வேகத்தை தாண்டாத நிலையில் சிராஜ் அசால்ட்டாக 145 கிமீ வேகத்தை தாண்டி பவுலிங் செய்கிறார்.

கம்பேக்

கம்பேக்

நேற்று போட்டியில் முதல் ஓவரில் இவர் ரன் எதுவும் கொடுக்கவில்லை. அவர் வீசிய இரண்டாவது ஓவரில் வெறும் 2 ரன் மட்டுமே கொடுத்தார். இவரின் பந்தை தொட கூட முடியாமல் ஹைதராபாத் வீரர்கள் நேற்று திணறினார்கள். டெத் ஓவர்களில் சிராஜ் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் பவர் பிளேவில் சிராஜ்தான் பெஸ்ட் பவுலர்.

சீசன்

சீசன்

இந்த சீசனில் பவர் பிளேவில் குறைந்த ரன் கொடுத்த வீரர் சிராஜ்தான். 2020 ஐபிஎல் சீசனில் மோசமாக பவுலிங் செய்த சிராஜ் இந்த வருடம் எதிர்பார்க்காத கம்பேக்க்கை கொடுத்துள்ளார். 2021 சீசனில் பெங்களூர் அணியின் முக்கியமான பவுலராக சிராஜ் உருவெடுத்துள்ளார்.

Story first published: Thursday, April 15, 2021, 17:49 [IST]
Other articles published on Apr 15, 2021
English summary
IPL 2021: Mohammed Siraj become the greatest pacer of RCB in this season
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X