பெற்றோருக்கு கொரோனா...தோனி முன் இருக்கும் முக்கிய கேள்வி.. சிஎஸ்கே ரசிகர்கள் வெய்ட்டிங்!

ராஞ்சி: தோனியின் பெற்றோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முன்னர் மிகப்பெரும் கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது.

Dhoniயின் பெற்றோருக்கு Corona! Ranchi hospitalல் அனுமதி | OneIndia Tamil

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தற்போது ஐபிஎல் தொடருக்காக மும்பையில் முகாமிட்டு விளையாடி வருகிறார்.

தில்லான முடிவு.. கேதார் ஜாதவை உள்ளே கொண்டு மிகப்பெரிய தியாகம் செய்த வார்னர்.. பரபர பிளானிங்!

இந்நிலையில் தோனியின் தாய் மற்றும் தந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அச்சுறுத்தும் கொரோனா

அச்சுறுத்தும் கொரோனா

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2ம் அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களுக்கு கொரோனா பாதித்து வருகிறது.

தோனி வீட்டில் கொரோனா

தோனி வீட்டில் கொரோனா

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் தாய், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் தாய் தேவகி தேவி, தந்தை பன் சிங் இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் தற்போது ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரின் ஆக்ஸிஜன் அளவும் சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய போட்டி

இன்றைய போட்டி

எம்.எஸ்.தோனி தற்போது 14ஆவது ஐபிஎல் தொடரில் பங்கேற்று சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது மும்பையில் முகாமிட்டு இன்று இரவு 7:30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதற்காகச் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

முக்கிய கேள்வி

முக்கிய கேள்வி

இந்நிலையில் தோனியின் பெற்றோருக்கு கொரோனா உறுதியாகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பெற்றோருக்காக எம்.எஸ்.தோனி ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவாரா, அல்லது தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்ன முடிவெடுப்பார் தோனி

என்ன முடிவெடுப்பார் தோனி

கடந்த 2015ம் ஆண்டு தோனியின் மகள் ஜீவா பிறந்தபோது தோனி இந்தியாவில் மனைவியுடன் இல்லாமல் உலகக்கோப்பை தொடருக்காக அயல்நாட்டில் இருந்தார். அப்போது அவரது மனைவி சாக்‌ஷி, பெண் குழந்தை பிறந்துள்ளது என தகவல் தெரிவிக்க முயன்றபோது கூட தோனி கிரிக்கெட் பயிற்சியில் இருந்ததாகவும், அழைப்பு வருவதை கவனிக்காமல் இருந்தார். இந்நிலையில் பெற்றோருக்காக தோனி செல்வாரா அல்லது சென்னை அணிக்காக தொடர்ந்து இருப்பாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
MS Dhoni's parents Testing positive for Covid-19, admitted to hospital after
Story first published: Wednesday, April 21, 2021, 16:03 [IST]
Other articles published on Apr 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X