“ எனக்கு வயதாகிவிட்டது.. ” எம்.எஸ்.தோனியின் உருக்கமான பேச்சு.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள் - முழு விவரம்

மும்பை: சென்னை அணிக்காக 200 போட்டிகளில் ஆடியது குறித்து எம்.எஸ்.தோனி மனம் உருகி பேசியுள்ளார்.

தமிழக வீரர் Shahrukh Khan-க்கு அறிவுரை வழங்கிய Dhoni.. வைரலாக புகைப்படம்

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

தோனிக்கு சிஎஸ்கே அணி கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்.. நட்புக்காக தோனி செய்த விஷயம்.. வைரலாகும் வீடியோ

சென்னை அணிக்காக தோனி விளையாடிய 200வது போட்டியில் வெற்றியடைந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்கள் வருத்தம்

ரசிகர்கள் வருத்தம்

இதுகுறித்து பேசியுள்ள கேப்டன் தோனி, சிஎஸ்கே அணிக்காக 200 போட்டிகளில் பங்கேற்றது என்பது எனது நீண்ட பயணம் ஆகும். இந்த நீண்ட கால பயணத்தால் எனக்கு சற்று வயதாகிவிட்டது போன்று உணர்கிறேன். ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டில் இருந்து தென் ஆப்பிரிக்கா, துபாய், சென்னை சிஎஸ்கேவுடன் எனது பயணம் தொடங்கி சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த முறை, நாங்கள் மும்பையில் விளையாடுவோம் என எதிர்பார்க்கவில்லை.

சென்னை பிட்ச் சரியில்லை

சென்னை பிட்ச் சரியில்லை

சென்னை அணியின் ஹோம் மைதானமான சேப்பாக்கம் பிட்ச் கடந்த 2011ம் ஆண்டு மட்டுமே எங்களுக்கு நன்றாக இருந்தது. அதன் பிறகு மறுவடிவமைப்புச் செய்யப்பட்டுள்ள பிட்ச் எங்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தவில்லை. ஆனால், மும்பை ஆடுகளம் சிறப்பாக உள்ளது. பந்து அதிகமாக ஸ்விங் ஆகவில்லை, பனிப்பொழிவு இல்லாததால், பந்தில் நல்ல வேகம் உள்ளது.

தோனி பாராட்டு

தோனி பாராட்டு

சிறப்பாக பந்துவீசிய தீபக் சஹர் சிறந்த டெத் ஓவர் பவுலராக உருமாறியுள்ளார், எனக்கு அட்டாக்கிங் பவுலிங் தேவை என்ற சூழல் வரும் போது சஹாரை பயன்படுத்தினேன். ஏனென்றால் அவர் அந்த பிட்ச்சில் நன்கு வீசக்கூடியவர். டெத் பவுலிங்கை பிராவோ சிறப்பாக வீசுவார் என்பதால்தான், தீபக் சஹருக்கு முன்கூட்டியே 4 ஓவர்களையும் முடித்துவிட்டேன். ஆனால் அவர் முன்கூட்டியே கொடுக்கப்பட்ட 4 ஓவர்களையும் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார்.

அசத்தும் மொயின் அலி

அசத்தும் மொயின் அலி

நேற்றைய போட்டியில் 46 ரன்கள் அடித்து உதவிய மொயின் அலி குறித்து பேசிய தோனி, மொயின் அலியை தொடக்க வரிசையில் பேட் செய்ய வைக்க வேண்டும் என முடிவெடுத்தோம். எங்களுக்கு கிடைத்த வீரர்களை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள முயல்கிறோம். பந்தை சரியான டைமிங்கில் அடித்துவிடக்கூடிய நல்ல பேட்ஸ்மேன், வலுவான ஷாட்களை ஆடக்கூடியவர் மொயின் அலி என தோனி தெரிவித்தார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
MS Dhoni shares his experiece After Win In His 200th Match For CSK
Story first published: Saturday, April 17, 2021, 15:47 [IST]
Other articles published on Apr 17, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X