என்ன நினைச்சு இப்படி பண்றாங்கன்னே தெரியலையே.. கூடாரத்தை காலி செய்த மும்பை இந்தியன்ஸ்.. செம பிளான்!

மும்பை : 2௦21 ஐபிஎல் தொடருக்கு அனைத்து அணிகளும் இப்போதே தங்களை தயார் செய்து வருகின்றன.

கடந்த சீசனின் சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் தங்கள் அணியில் இரு வேகப் பந்துவீச்சாளர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டு மற்ற அனைவரையும் நீக்கி இருக்கிறது.

உனக்கான நேரம் வரும்... அதுவரைக்கும் கடுமையா உழைச்சுக்கிட்டே இரு... ரஹானே அட்வைஸ் யாருக்கு?

இந்த முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை. வேகப் பந்துவீச்சாளர்களை மொத்தமாக நீக்க என்ன காரணம்? என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

வேகப் பந்துவீச்சாளர்கள்

வேகப் பந்துவீச்சாளர்கள்

கடந்த 2020 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, ட்ரென்ட் போல்ட் இணைந்து சிறப்பாக பந்து வீசினர். அவர்கள் இருவரும் ஒன்றாக வீசியதால் அனைத்து அணிகளும் திணறி விக்கெட்களை இழந்தன. ஆனால், மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் என யாரும் அந்த அணிக்கு சரியாக அமையவில்லை.

திருப்தி இல்லை

திருப்தி இல்லை

மலிங்கா விலகிய நிலையில், ஜேம்ஸ் பாட்டின்சன், நாதன் கோல்டர் நைல், மிட்செல் மெக்கிளெனகன் என மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை மாற்றி, மாற்றி பயன்படுத்தி வந்தது மும்பை. ஆனால், அவர்கள் செயல்பாட்டில் திருப்தி ஏற்படவில்லை. இந்த நிலையில், அவர்களை அணியில் இருந்து நீக்கி உள்ளது மும்பை.

நீக்கம்

நீக்கம்

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து மலிங்கா, நாதன் கோல்டர் நைல், பாட்டின்சன், மிட்செல் மெக்கிளெனகன், செர்பேன் ரூதர்போர்டு, பிரின்ஸ் பல்வந்த் ராய், திக்விஜய் தேஷ்முக் என ஆறு வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற் பந்துவீச்சாளர் நீக்கப்பட்டுள்ளனர்.

என்ன திட்டம்?

என்ன திட்டம்?

2021 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சாளர்களை தான் அதிக அளவில் குறி வைக்கப் போகிறது என இதை வைத்தே பலரும் கூறி வருகின்றனர். நிச்சயம் இரண்டு அனுபவம் கொண்ட வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை ஏலத்தில் வாங்க மும்பை இந்தியன்ஸ் திட்டமிடும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2021 : Mumbai Indians auction plan in IPL 2021
Story first published: Sunday, January 24, 2021, 13:46 [IST]
Other articles published on Jan 24, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X