அவசர அவசரமாக மும்பை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை... நாள் முழுவதும் தடைபட்ட பயிற்சி... காரணம் என்ன?

சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி திடீரென நிறுத்தப்பட்டு அணியை சேர்ந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடர் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வரும் ஏப்.9ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் மும்பை அணியில் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், அணியின் பயிற்சி முகாம் நாள் முழுவதும் தடைபட்டது.

ஐபிஎல்

ஐபிஎல்

இந்தாண்டு ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோத தயாராகி வருகின்றன. வீரர்கள், அணி நிர்வாகிகள் அனைவரும் ஹோட்டல்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். எனினும் மும்பை அணியில் ஒருவருக்கு நேற்று கொரோனா உறுதியானது பரபரப்பை கிளப்பியது.

கொரோனா உறுதி

கொரோனா உறுதி

அந்த அணியின் ஸ்கவுட் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆலோசகர் கிரண் மோரேவிற்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையில், பாதிப்பு கண்டறியப்பட்டு அவர் தற்போது ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இது அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

 தடைபட்ட பயிற்சி

தடைபட்ட பயிற்சி

இந்நிலையில் கிரண் மோரோவுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், நேற்று முழுவதும் பயிற்சி நிறுத்தப்பட்டு அனைத்து வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு அவசரமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் எடுக்கப்பட்ட இந்த பரிசோதனை முடிவில் அதிர்ஷ்டவசமாக யாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல் ஐபிஎல் பெரும் இடையூறாக இருக்கும் என தெரிகிறது. ஏனென்றால் மும்பையில் ஐபிஎல் தொடருக்காக பணிபுரியும் பலர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 2 தினங்களுக்கு முன்னர் வான்கேடே மைதான ஊழியர்கள் 10 பேருக்கு கொரொனா உறுதியான நிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதே போல், அக்‌ஷர் பட்டேல், தேவ்தத் பட்டிக்கல் உள்ளிட்டோருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதால் ஐபிஎல்-க்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Mumbai Indians players, support staff tested Corona negative after Kiran More's positive test
Story first published: Wednesday, April 7, 2021, 13:35 [IST]
Other articles published on Apr 7, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X