For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஒத்திவைப்பால் பலனடைந்த வங்கதேச அணி... போட்ட ப்ளான் எல்லாம் வேஸ்ட்.. முழு விவரம்!

டெல்லி: ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் வங்கதேச அணிக்கு ஒரு பலன் கிடைத்துள்ளது.

Recommended Video

IPL suspension பலனடைந்த Bangaladesh Team | Oneindia Tamil

அணிகளின் பபுள்களுக்குள் கொரோனா அதிகரித்ததால் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான டீம்.... இன்னைக்கு தெரிஞ்சுடும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான டீம்.... இன்னைக்கு தெரிஞ்சுடும்

இதனால் தொடரில் பங்கேற்றிருந்த அனைத்து அயல்நாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

இரு வீரர்கள்

இரு வீரர்கள்

வங்கதேசத்தில் இருந்து சகிப் அல்ஹசன் மற்றும் முஸ்திவிசூர் ரஹ்மான் ஆகிய இருவர் மட்டுமே இந்த ஐபிஎல் பங்கேற்றிருந்தனர். இவர்கள் நேற்று டெல்லியில் இருந்து கிளம்பிய தனி விமானம் மூலம் வங்கதேசம் சென்றடைந்தனர். அங்கு அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

புகைப்படம்

புகைப்படம்

இதுகுறித்து ட்விட்டரில் புகைப்படம் வெளியிட்டுள்ள முஸ்திவிசூர் ரஹ்மான், கடவுளின் ஆசியால் எந்த சிக்கலும் இன்றி நாட்டிற்கு வந்தடைந்தோம். இதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா அணி மற்றும் எங்களுக்கு உறுதுணையாக இருந்த வங்கதேச சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி எனக்குறிப்பிட்டுள்ளார்.

14 நாட்கள் தனிமை

14 நாட்கள் தனிமை

அவர்கள் இருவரும் குவாரண்டைனுக்கு பிறகு நேரடியாக வங்கதேச அணியுடன் இணையவுள்ளனர். ஏனென்றால் வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையே வரும் மே 23ம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடர் முழுவதும் தாஹாவில் நடைபெறவுள்ளது.

வங்கதேசத்திற்கு பலன்

வங்கதேசத்திற்கு பலன்

ஒருவேளை ஐபிஎல் தொடர் முழுவதுமாக நடைபெற்றிருந்தால், லீக் தொடருடன் இந்த வீரர்கள் வங்கதேசம் திரும்ப வாய்ப்பு இருந்தது. அவர்களின் குவாரண்டை காலத்தை குறைத்துவிட்டு இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்க வைக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திட்டம் போட்டது. ஆனால் தற்போது ஐபிஎல் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டதால், இவர்கள் தற்போது 14 நாட்கள் முழுவதுமாக தனிமைப்படுத்தபடவுள்ளனர். இலங்கை தொடரின் தொடக்கம் முதலே இருப்பார்கள். இது வங்கதேச அணிக்கு ஒரு பலனாக கிடைத்துள்ளது.

Story first published: Friday, May 7, 2021, 14:09 [IST]
Other articles published on May 7, 2021
English summary
Mustafizur Rahman and Shakib Al Hasan landed safely in Bangladesh, will join Team after quarantine
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X