சாரி.. உதவ முடியாது.. சிஎஸ்கே உட்பட மொத்தமாக கைவிரித்த 7 அணிகள்.. கடும் கலக்கத்தில் ராஜஸ்தான்!

சென்னை: டிரான்ஸ்பர் விண்டோவில் ராஜஸ்தான் அணிக்கு உதவ எந்த அணியும் முன்வரவில்லை என்று தகவல்கள் வருகின்றன.

2021 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி மோசமான நிலையில் உள்ளது. தொடர் தோல்விகள், வரிசையாக வீரர்களின் வெளியேற்றம் என்று பல்வேறு காரணங்களால் அந்த அணி நிலைகுலைந்து போய் உள்ளது.

3 வருட போராட்டம்.. யாருமே மதிக்கவில்லை.. ஒரே போட்டியில் தரமான பதிலடி தந்த இளம் வீரர்.. மாஸ் பின்னணி

சஞ்சு சாம்சன் அந்த அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாலும் கூட நல்ல வீரர்கள் இல்லாத காரணத்தாலும், போதிய ஆதரவு இல்லாத காரணத்தாலும் ராஜஸ்தான் அணி திணறிக் கொண்டு இருக்கிறது.

 ராஜஸ்தான்

ராஜஸ்தான்

ராஜஸ்தான் அணியில் தொடக்கத்திலேயே காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர் வெளியேறிவிட்டார். அதன்பின் காயம் காரணமாக முக்கிய வீரர் பென் ஸ்டோக்ஸும் வெளியேறிவிட்டார். மீதம் இருந்தது 6 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே.

காயம்

காயம்

ஆனால் அதிலும் கூட லியாம் லிவிங்ஸ்டன் தனிப்பட்ட காரணமாக வெளியேறினார். பின்னர் அவரை தொடர்ந்து ஆண்ட்ரு டை இந்தியாவில் உயரும் கொரோனா கேஸ்களை காரணம் காட்டி தொடரில் இருந்து வெளியேறினார். இப்போது அந்த அணி டிரான்ஸ்பர் விண்டோ மூலம் வேறு அணியில் இருக்கும் வீரர்களை எடுக்கும் முயற்சியில் உள்ளது.

பஞ்சாப்

பஞ்சாப்

ஆனால் எந்த அணியும் ராஜஸ்தானுக்கு டிரான்ஸ்பர் விண்டோவில் உதவ முன்வரவில்லை என்கிறார்கள். சிஎஸ்கே அணி உத்தப்பாவை தர மறுத்துவிட்டது, அதேபோல் மும்பை அணி கிறிஸ் லின்னை தர மறுத்துவிட்டது என்கிறார்கள். தங்கள் அணியில் இவர்கள் மாற்று வீரர்களாக உள்ளனர் என்பதால் மும்பை, சிஎஸ்கே ஆகிய அணிகள் டிரான்ஸ்பருக்கு மறுத்துவிட்டது.

தகவல்

தகவல்

ராஜஸ்தான் அணி பலரிடம் டிராஸ்ன்பர் உதவி கேட்டு ஏமாற்றம் அடைந்ததாக தகவல்கள் வருகின்றன. தற்போது இருப்பதில் பஞ்சாப் அணி மட்டுமே ராஜஸ்தானுக்கு உதவ முன் வந்துள்ளது. பஞ்சாப் அணியின் டேவிட் மாலன் மட்டுமே ராஜஸ்தான் அணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. வேறு எந்த அணியும் ராஜஸ்தானுக்கு வீரர்களை டிரான்ஸ்பர் செய்ய முன் வரவில்லை என்று தகவல்கள் வருகின்றன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: No team is ready to transfer any player to Rajasthan Royals mid-season.
Story first published: Saturday, May 1, 2021, 14:58 [IST]
Other articles published on May 1, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X