For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நடந்த 5 மேட்சுலயும்.. "மேன் ஆப் மேட்ச்" நம்ம புள்ளிங்கோ தான்.. காரணம் அதுவா இருக்குமோ?

சென்னை: ஐபிஎல் போட்டியில் இந்திய வீரர்கள் படு தீவிரமாக விளையாடுவது பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 5 போட்டிகளிலும் இந்திய வீரர்களே ஆட்ட நாயகன் விருதினை பெற்றுள்ளனர்.

போட்டிப்போட்டுக்கொண்டு தொடரில் சிறப்பாக செயல்படுவதன் பின்னணி என்ன, அவர்களின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு என்ன காரணம் என தெரியவந்துள்ளது.

 ஹர்ஷல்

ஹர்ஷல்

பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் களமிறங்கினார். சிறப்பாக பந்துவீசிய அவர், 4 ஓவர்கள் வீசி 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை எடுத்தார். அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்கள் எடுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ராணா

ராணா

கொல்கத்தா அணி வீரரான நிதிஷ் ராணா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக அதிரடி காட்டினார். தொடக்க வீரராக களமிறங்கிய இவர், 56 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். இதனால் கொல்கத்தா அணி கடின இலக்கு நிர்ணயித்து அந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது.

சாம்சன்

சாம்சன்

கடந்த 2 தினங்களாக ஐபிஎல் வட்டாரத்தில் பேசப்பட்ட பெயர் சஞ்சு சாம்சன். பஞ்சாப் அணி நிர்ணயித்த 221 என்ற இலக்கை எட்ட ராஜஸ்தான் அணி கேப்டனாக ஒற்றை ஆளாக போராடினார். அதிரடியாக ஆடிய இவர் 63 பந்துகளில் 119 ரன்களை விளாசினார். எனினும் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

ராகுல்

ராகுல்

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் இந்த இலக்கையும் கொல்கத்தா அணி எட்டவிடாமல் செய்தவர் ராகுல் சஹார். 4 ஓவர்கள் வீசிய அவர் 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னணி

பின்னணி

இதுவரை நடைபெற்றுள்ள 5 போட்டிகளிலும் இந்திய வீரர்களே ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளனர். அவர்களின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணமாக டி20 உலகக்கோப்பை பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. எனவே இந்திய அணியில் இடம் பிடிப்பதை மனதில் வைத்தும் இந்திய வீரர்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது. எனினும் தொடரின் முடிவில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என ஓரளவிற்கு புரிந்துவிடும்.

Story first published: Wednesday, April 14, 2021, 19:51 [IST]
Other articles published on Apr 14, 2021
English summary
only Indian Players has Won the Man of the match award in last 5 IPL matches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X