ஆட்டம் முழுவதும் ஒரே கவலை.. அந்த ஒரு விஷயம் நடக்கவில்லை.. போட்டிக்கு பின்னர் தோனி நிம்மதி பெருமூச்சு

சார்ஜா: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஒட்டுமொத்த திட்டத்தையும் ஒரே நொடியில் மாற்றியதனால் தான் வெற்றி பெற முடிந்தது என கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

 கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ் கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்

இதில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 156/6 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பின்ன விளையாடிய சிஎஸ்கே 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

இந்த போட்டியில் முதல் பாதி ஆட்டம் ஆர்சிபியின் கையில் தான் இருந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி (53) படிக்கல் (70) இருவருமே அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார்கள். இதனால் 13 ஓவர்களில்

110 ரன்கள் சேர்த்தது. இதனால் அடுத்தடுத்த ஓவர்களில் அதிரடி காட்டி 190க்கும் அதிகமான ரன்களை சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தோனியின் ப்ளான்

தோனியின் ப்ளான்

ஆனால் ஆட்டம் தலைகீழாக மாறியது. கடைசி 4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 25 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 156/6 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த திடீர் சரிவுக்கு சிஎஸ்கே பவுலிங்கில் தோனி அடுத்தடுத்து ஏற்படுத்திய மாற்றங்களே ஆகும். பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 157 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

தோனியின் கவலை

தோனியின் கவலை

இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய தோனி, ஆட்டம் முழுவதும் எனக்கு ஒரே ஒரு கவலை தான் இருந்துக் கொண்டிருந்தது. அதாவது கடந்தாண்டு ஐபிஎல்-ல் சார்ஜா மைதானத்தில் 2வதாக பேட்டிங் செய்த போது பனி கொட்டியிருந்தது. ஆனால் இந்த போட்டியில் நினைத்த அளவுக்கு பனி பொழியாததால் ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஆர்சிபியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆட்டத்தின் 8 மற்றும் 9வது ஓவர்களில் பிட்ச் ஸ்லோவாக தொடங்கியது. எனவே ஜடேஜாவை கொண்டு வந்து சிறப்பாக காரியத்தை முடித்தோம்.

பேட்டிங் திட்டம்

பேட்டிங் திட்டம்

அமீரகத்தில் உள்ள 3 மைதானங்களும் மிக வேறுபட்டு இருக்கின்றன. அதில் சார்ஜா மைதானம் தான் மிகவும் ஸ்லோவான பிட்ச். எனவே இங்கு வலது மற்றும் இடது கை பேட்ஸ்மேன் ஜோடி இருந்தால் தான் நன்றாக இருக்கும். சிஎஸ்கேவில் நிறைய இடது கை வீரர்கள் உள்ளனர். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் இறங்குவார்கள். அதனால் தான் ராயுடுவுக்கு பின்னதாக ரெய்னாவை களமிறக்கினேன். சிஎஸ்கே அணியில் உள்ள அனைவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்கள். இது கூடுதல் பலமாக உள்ளது என தோனி தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
MS Dhoni explains CSK's turnaround in RCB Match, says Our players have understood their roles
Story first published: Saturday, September 25, 2021, 9:54 [IST]
Other articles published on Sep 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X