என்ன ஒரு பாசம்..இந்தியர்கள் மீது பேட் கம்மின்ஸ் கொண்ட அக்கறை..ஐபிஎல்-க்கு பிறகு கூறிய வார்த்தைகள்!

மாலத்தீவு: ஐபிஎல் தொடர் ஏன் தொடர்ந்து நடந்திருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 14வது ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கெட்டோ பண்ட்... 2 கோடி ரூபாய் வசூல் செஞ்ச நட்சத்திர தம்பதி... சிறப்பான உதாரணம்

கொரோனா சமயத்தில் கிரிக்கெட் போட்டிகள் தேவைதானா என சமூக வலைதளங்களில் எழுந்து வந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.

மாலத்தீவில் முகாம்

மாலத்தீவில் முகாம்

கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியருக்கு கொரோனா உறுதியான நிலையில் பேட் கம்மின்ஸ் தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. இதனையடுத்து சகநாட்டு வீரர்களுடன் அவர் தற்போது மாலத்தீவில் முகாமிட்டுள்ளார். வரும் 15ம் தேதி வரை அவர்கள் அங்கு தங்கவுள்ளனர்.

கம்மின்ஸ் வருத்தம்

கம்மின்ஸ் வருத்தம்

இந்நிலையில் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது குறித்து பேசியுள்ள பேட் கம்மின்ஸ், இந்தியாவில் இருக்கும் போது நான் எப்போது பாதுகாப்பாக இல்லை என கருதியதில்லை. நாங்கள் சொகுசு ஹோட்டல்களில் நாங்கள் தங்கவைப்பட்டிருந்தோம். அப்போது நான் பேரழிவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு எதுவும் செய்யமுடியவில்லை என கருதினேன். மக்களின் பிரச்னைகளில் இருந்து பிரிக்கப்பட்டவன் போன்றும் உதவிசெய்ய முடியாதவன் போன்றும் வருந்தினேன்.

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி

ஐபிஎல் குறித்து நான் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். சிலர் கொரோனா காலத்தில் ஐபிஎல் தொடர் தேவையா என கேட்டு வந்தனர். ஆனால் மக்கள் பலரும் இந்த கொரோனா சமயத்தில் இரவு 3 - 4 மணி நேரம் இந்த தொடர் நடைபெறுவது பாராட்டக்குறியது என தெரிவித்தனர். ஐபிஎல் தொடர் மக்களை வீட்டிலேயே வைக்க உதவியது. இதனால் பலரும் ஐபிஎல் தொடர் நடைபெற்றது நல்ல விஷயம் தான் தெரிவித்தனர்.

இந்தியர்களின் பாசம்

இந்தியர்களின் பாசம்

இந்திய மக்கள் என்னிடம் மிகுந்த அன்பை காட்டி வருகின்றனர். அவர்கள் மிகவும் அற்புதமானவர்கள். அவர்களுக்கு இந்த கடுமையான நேரத்தில் உதவ வேண்டும் என்றும் அவர்கள் காட்டிய அன்பில் கொஞ்சமாவது காட்ட வேண்டும் என நினைக்கிறேன் எனத்தெரிவித்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Pat Cummins Views on IPL 2021 Supended
Story first published: Friday, May 7, 2021, 13:28 [IST]
Other articles published on May 7, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X