For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படிபட்ட வீரருக்கு வாய்ப்பு கொடுக்கலயே..மறைத்து வைத்திருந்த பஞ்சாப் கிங்ஸ் ..பயிற்சியாளர் விளக்கம்

சென்னை: ஐபிஎல் -ல் தொடர்ந்து திணறிவந்த பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்று திடீரென களமிறக்கிய இளம் ஸ்பின்னரின் உதவியால் வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்படி இருந்தா எப்படீங்க பெரிய ஸ்கோர் அடிக்க முடியும்... பிரட் லீ கேள்வி இப்படி இருந்தா எப்படீங்க பெரிய ஸ்கோர் அடிக்க முடியும்... பிரட் லீ கேள்வி

முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 131/6 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 17.4 ஓவர்களில் 132/1 ரன்கள் எடுத்தது.

இளம் வீரர்

இளம் வீரர்

இந்த ஐபிஎல் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி கண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, சிறப்பான பந்துவீச்சால் மும்பை அணியை வெற்றி கொண்டது. இந்த போட்டியில் மும்பை அணியின் ஸ்கோருக்கு இளம் வீரர் ரவி பிஷ்னோய் முக்கிய காரணம் ஆவார். 4 ஓவர்களை வீசிய அவர், 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மும்பை அணியின் முக்கிய வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோரின் விக்கெட்களை எடுத்தார்.

தாமதமான வாய்ப்பு

தாமதமான வாய்ப்பு

கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான ரவி பிஷ்னோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். 14 போட்டிகளில் 12 விக்கெட்களை எடுத்துள்ளார். ஆனால் இந்த சீசனிலும் அவர் முதல் 4 போட்டிகளிலும் களமிறக்கப்படவில்லை. 5வது போட்டியில் களமிறக்கப்பட்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரியளவில் உதவி செய்துள்ளார்.

காரணம்

காரணம்

இந்நிலையில் 'இத்தனை நாள் ஏன்பா கொண்டு வரல' என்று ரசிகர்களிடம் எழுந்த கேள்விக்கு பயிற்சியாளர் அனில் கும்ப்ளே பதிலளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரவி பிஷோனி கடந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் ஆடினார். ஆனால் இந்த சீசனில் அவர் கடந்த சீசனை போன்று செயல்படுவார் என முதலில் எனக்கு தோனவில்லை. ஏனென்றால் பயிற்சி ஆட்டங்களிலேயே அவர் லெக் சைட்களில் சிறப்பாக பந்துவீசவில்லை. அதனால் சில மாற்றங்கள் செயல்பட வேண்டும் என்பதால் முதல் சில போட்டிகளில் விளையாடவில்லை.

கும்ப்ளே பாராட்டு

கும்ப்ளே பாராட்டு

ஆனால் கடந்த வாரம் முழுவதும் அவரின் ஈடுபாடு மற்றும் ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது அவர் கம்பேக் கொடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் சிறந்த போராளி. முக்கியமான போட்டிகளில் இரண்டு விக்கெட்கள் எடுப்பது என்பது பாராட்டக்குறியது என கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

2வது வெற்றி

2வது வெற்றி

மும்பை அணி நிர்ணயித்த 131 என்ற இலக்கை கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி எட்டியது. கே.எல்.ராகுல் 52 பந்துகளில் 60 ரன்களும், கெயில் 35 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தனர். இதனால் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Story first published: Saturday, April 24, 2021, 19:56 [IST]
Other articles published on Apr 24, 2021
English summary
PBKS Coach Anil Kumble Praises Ravi Bishnoi's performance against MI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X