தமிழக வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்... கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டன்.. நான் ரெடி என பதில்!

கொல்கத்தா: ஐபிஎல் தொடர் செப்டம்பரில் நடைபெறுவதாக அறிவித்துள்ள நிலையில் கொல்கத்தா அணியில் பெரிய மாற்றம் நிகழவிருக்கிறது.

கொரோனாவால் தடைபட்டுள்ள ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப் 18 முதல் அக்.10ம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்தியாவின் கைவிட்டுப் போகிறது டி20 உலகக்கோப்பை.. ஐசிசி-க்கு செய்தி அனுப்பியாச்சு.. பிசிசிஐ முடிவு இந்தியாவின் கைவிட்டுப் போகிறது டி20 உலகக்கோப்பை.. ஐசிசி-க்கு செய்தி அனுப்பியாச்சு.. பிசிசிஐ முடிவு

இதற்காக அந்நாட்டு அரசுடன் பிசிசிஐ தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இங்கிலாந்து திட்டவட்டம்

இங்கிலாந்து திட்டவட்டம்

இந்த தொடர் செப்டம்பர் - அக்டோபர் கால இடைவெளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. டி20 உலகக்கோப்பை தயாராகும் விதமாக அனைத்து அணிகளும் சர்வதேச போட்டிகளை திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் ஐபிஎல் நடக்கவிருக்கும் நாட்களில் இங்கிலாந்து அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதனால் வீரர்கள் தாய்நாட்டிற்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என இங்கிலாந்து வாரியம் ஏற்கனவே கூறிவிட்டது.

கொல்கத்தா அணி

கொல்கத்தா அணி

இங்கிலாந்தின் இந்த அறிவிப்பால் கொல்கத்தா அணிக்கு தான் பெரிய பாதிப்பு ஆகும். ஏனென்றால் கொல்கத்தா அணியின் கேப்டன் இங்கிலாந்து வீரர் இயான் மோர்கன் ஆகும். இதனால் அந்த அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டியுள்ளது. இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஏற்கனவே கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.

கார்த்திக்

கார்த்திக்

மோர்கனுக்கு அடுத்ததாக அணியை வழிநடத்த துணை கேப்டனாக இருக்கும் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கம்பீருக்கு பிறகு தினேஷ் கார்த்திக் தான் கொல்கத்தா அணியை வழிநடத்தி வந்தார். ஆனால் அவரின் தலைமையில் அந்த அணி பெரிதாக சோபிக்கவில்லை. அவர் வழிநடத்திய 37 போட்டிகளில் 21 வெற்றிகளே கிடைத்துள்ளது. இதனால் 2020ம் ஆண்டு ஐபிஎல்-ன் பாதியிலேயே கேப்டன் மாற்றப்பட்டார். இந்நிலையில் மீண்டும் தினேஷ் கார்த்திக்கிற்கே அந்த பதவி போகும் என தெரிகிறது.

கேப்டன்

கேப்டன்

இந்நிலையில் மீண்டும் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார். அவர், இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது, பார்ப்போம். கேப்டன் இயான் மோர்கன் பங்கேற்பதும் இன்னும் உறுதியாகவில்லை. பேட் கம்மின்ஸும் தொடரில் பங்கேற்க மாட்டார். இந்த சூழ்நிலையில் எனக்கு கேப்டன் பதவி தேடி வந்தால், நிச்சயம் ஏற்றுக்கொள்வேன் எனக் கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dinesh Karthik Ready to be a next Captain for KKR
Story first published: Saturday, June 5, 2021, 18:50 [IST]
Other articles published on Jun 5, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X