கடும் மோதலுக்கு இடையில் "பிளே ஆஃப்" களம்.. ஒவ்வொரு அணிகளின் தற்போதைய நிலை என்ன?

துபாய்: ஐபிஎல் 2021 தரவரிசையில் ஒவ்வொரு அணிகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செம்.19ம் தேதி தொடங்குகிறது.

ஐபில்: கோலியின் ரெக்கார்டையே முறியடிக்கும் வீரர்.. நிச்சயம் 2 - 3 சதங்களை அடிப்பார்.. கம்பீர் உறுதி ஐபில்: கோலியின் ரெக்கார்டையே முறியடிக்கும் வீரர்.. நிச்சயம் 2 - 3 சதங்களை அடிப்பார்.. கம்பீர் உறுதி

இதில், முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது. மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரின் ஃப்ளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 2வது போட்டி அக்டோபர் 11ம் தேதியும், 3வது போட்டி அக்டோபர் 15ம் தேதியும் நடைபெறவுள்ளது . இறுதிப்போட்டி அக்டோபர் 15ம் தேதி நடைபெறவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அனைத்து அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய் மற்றும் சார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி மீதம் உள்ள 31 போட்டிகளில் 13 போட்டிகள் துபாயிலும், 10 போட்டிகள் சார்ஜாவிலும், 8 போட்டிகள் அபுதாபியிலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் 2021 தரவரிசையில் ஒவ்வொரு அணிகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

 முதலிடம்

முதலிடம்

கடந்த 2020ம் ஆண்டும் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறிய டெல்லி கேபிட்டல்ஸ், இம்முறையும் நன்றாகவே விளையாடியுள்ளது. இந்த சீஸனின் முதல் பாதியில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி 6 போட்டிகளில் வென்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. +0.547 இவர்களது ரன் ரேட். ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் ஐயர் போன்ற இந்தியாவின் வலிமையான இளம் பேட்டிங் படையே அந்த அணியின் பலம். ரிக்கி பாண்டிங்கின் பயிற்சியும் அந்த அணிக்கு கூடுதல் பலம். இந்த இரண்டாவது சுற்றில், டெல்லி மேற்கொண்டு 6 போட்டிகள் விளையாட வேண்டும். இதில், 2 போட்டிகளில் வென்றாலே அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு நுழைந்து விடலாம்.

 மிரட்டலான கம்பேக்

மிரட்டலான கம்பேக்

கடந்த சீசனில் இந்த அமீரகத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதன் முதலாக ஐபிஎல் தொடரில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. எனினும், இந்த 2021 சீசனில், இந்தியாவில் நடந்த முதல் பாதியில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, அதில் 5 போட்டிகளில் வெற்றிப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. நெட் ரன் ரேட் +1.263. முதலிடத்தில் இருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு கூட இவ்வளவு ரன் ரேட் கிடையாது. தற்போது சிஎஸ்கே 10 புள்ளிகள் வைத்திருக்கிறது. மேற்கொண்டு இன்னும் 6 புள்ளிகள் சேர்த்தாலே, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்று விடலாம். அதாவது, இன்னும் 3 போட்டிகளில் சென்னை வென்றாலே போதும். கைவசம் 7 போட்டிகள் மீதமுள்ளன.

 பிளே ஆஃப் நோக்கி

பிளே ஆஃப் நோக்கி

சென்னையைப் போலவே முதல் பாதியில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, அதில் 5 போட்டிகளில் வெற்றிப் பெற்று 10 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. நெட் ரன் ரேட் -0.171. முதலிடத்தில் இருக்கும் மேற்கொண்டு இன்னும் 6 புள்ளிகள் சேர்த்தாலே, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்று விடலாம். அதாவது, இன்னும் 3 அல்லது 4 போட்டிகளில் வென்றால் பெங்களூரு பிளே ஆஃப் சென்றுவிடலாம். ஆனால், ரன் ரேட் குறைவாக இருப்பதே இந்த அணிக்கு மைனஸ். ஸோ, மீதமுள்ள 7 போட்டிகளில் 4ல் வெற்றிப் பெறுவது அந்த அணிக்கு அவசியம்.

 சறுக்கலுக்கு காரணம்?

சறுக்கலுக்கு காரணம்?

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் அணி மற்றும் தற்போதைய சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், இத்தொடரில் சற்று தடுமாறியே வருகிறது. ஹர்திக் பாண்ட்யா, ரோஹித் ஷர்மா என அந்த அணியின் வலிமையான பேட்டிங் ஆர்டர் சொதப்பியதே சறுக்கலுக்கு காரணம். எனினும், கொரோனா காரணமாக தொடர் பாதியில் நிறுத்தப்படுவதற்கு முன்பு, அந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 218 ரன்கள் இலக்கை சேஸிங் செய்து அபார வெற்றிப் பெற்றது. பொல்லார்ட் மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக அந்த போட்டியில் திரும்ப வந்தது அந்த அணிக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் அந்த அணி நான்காம் இடத்தில் உள்ளது. ரன் ரேட் +0.062. கைவசம் 7 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், பிளே ஆஃப் முன்னேற, குறைந்தபட்சம் 4 போட்டிகளிலாவது அந்த அணி வெற்றிப் பெற்றாக வேண்டும். 5ல் வென்றால் நிச்சயம் பிளே ஆஃப் இடம் உறுதி.

 சொதப்பலே எங்கள் சொத்து

சொதப்பலே எங்கள் சொத்து

7 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றி, 4ல் தோல்வி என 6 புள்ளிகளுடன் -0.190 என்று பின்தங்கி இருக்கும் ராஜஸ்தான் தரவரிசையில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான அந்த அணிக்கு ப்ளஸ் என்று சொல்ல வேண்டுமெனில், திறமையான சில இளம் வீரர்கள் உள்ளனர். ஆனால், கன்சிஸ்டன்சி ரேட் என்பது பூஜ்யம் தான். எல்லா சீசனையும் போல, இந்த சீசனிலும் சொதப்பல் மட்டுமே இவர்களது சொத்தாக உள்ளது. கோச் குமார் சங்கக்காரா ஏதாவது மேஜிக் செய்ததால் தான், பிளே ஆஃப் பற்றி நினைத்து பார்க்க முடியும். மீதமுள்ள 7 போட்டிகளில் 5 அல்லது 6 போட்டிகளில் ராஜஸ்தான் வென்றே தீர வேண்டும்.

 கன்சிஸ்டன்சி கிலோ என்ன விலை?

கன்சிஸ்டன்சி கிலோ என்ன விலை?

திறமையான இளம் வீரர் லோகேஷ் ராகுல் தலைமையில் கன்சிஸ்டன்சி இன்றி சிரமப்படும் மற்றொரு அணி பஞ்சாப். அனைத்து அணிகளின் ரசிகர்களுக்கும் பிடித்த அணி என்று கூட கூறலாம். ஆனால், இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3ல் மட்டுமே வெற்றிப் பெற்று 6 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் உள்ளது. ரன் ரேட் -0.368. பிளே ஆஃப் முன்னேற, மீதமுள்ள 6 போட்டிகளில் 5ல் நிச்சயம் அதிக ரன் ரேட்டுடன் வெற்றிப் பெற வேண்டும். இல்லையெனில், 6 போட்டிகளிலும் வெல்ல வேண்டும்.

 சொதப்பும் மோர்கன்

சொதப்பும் மோர்கன்

இந்த புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் கொல்கத்தா 7வது இடத்தில் உள்ளது. இதில், கொல்கத்தா அணியை பொறுத்தவரை, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற வேண்டுமெனில், வரவிருக்கும் 7 போட்டிகளில், கண்டிப்பாக 6 போட்டிகளிலாவது வெற்றிப் பெற்றே தீர வேண்டும். கேப்டன் இயன் மோர்கன், இங்கிலாந்து அணிக்கு முதன் முதலாக உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்தவர் என்றாலும், டி20 போட்டிகளில் அவரது கேப்டன்ஷிப் இதுவரை பெரியளவில் எடுபடவில்லை. தினேஷ் கார்த்திக் கேப்டன்ஷிப் சரியில்லை என்று தான், அவரை கேப்டன் பதவியில் இருந்து தூக்கி, மோர்கனை கேப்டனாக்கினார்கள். ஆனால், கார்த்திக்கே பரவாயில்லை என்பது போல் உள்ளது மோர்கனின் கேப்டன்ஷிப். எனினும், அவர் மீண்டும் வலிமையாக கம்பேக் கொடுக்கலாம்.

 எழுவது கடினம்

எழுவது கடினம்

புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள அணி சன் ரைசர்ஸ். 7 போட்டிகளில் விளையாடி ஒரேயொரு போட்டியில் தான் வென்றிருக்கிறது. 6 தோல்விகள். இனியும் பிளே ஆஃப் பற்றி இந்த அணி நினைத்துப் பார்க்க வேண்டுமெனில், இனி வரும் 7 போட்டிகளில் அனைத்திலும் வென்றாக வேண்டும். அதுவும் பயங்கரமான ரன் ரேட்டுடன். ஒருவேளை அப்படி வெற்றிப் பெற்றால், மற்ற சில அணிகளில் திடீர் மெகா சொதப்பல்ஸ் அரங்கேறும் பட்சத்தில் ஃப்ளூக்கில் அதிர்ஷ்டம் அடித்து பிளே ஆஃப் சென்றால் தான் உண்டு. பேட்டிங், பவுலிங் என எதுவுமே க்ளிக் ஆகவில்லை என்பதே அந்த அணியின் மைனஸ்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ipl 2021 points table dc remains no.1 csk - ஐபிஎல் 2021
Story first published: Thursday, September 16, 2021, 13:47 [IST]
Other articles published on Sep 16, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X