For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவருக்கு பதில் கேதர் ஜாதவ்.. இளம் வீரருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு..முன்னாள் வீரர் அட்வைஸ்!

சென்னை: நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணி தோல்வியடைந்த நிலையில் இளம் வீரர் மணீஷ் பாண்டேவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மோதிய போட்டியில் ஐதராபாத் அணி மோசமான தோல்வியை பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவருக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி அடைந்தது.

தோல்வி

தோல்வி

இந்த சீசனில் இதுவரை மூன்று போட்டிகளில் ஆடியுள்ள வார்னர் தலைமையிலான ஐதாராபாத் அணி 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இந்த மூன்று போட்டியிலும் ஐதராபாத் அணியின் தோல்விக்கு மணிஷ் பாண்டே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.

 கடும் பிரஷர்

கடும் பிரஷர்

முதல் போட்டியில் அரை சதம் மற்றும் 2வது போட்டியில் 38 ரன்கள் எடுத்த இவர் நேற்றைய போட்டியில் மட்டுமே 2 ரன்களுக்கு அவுட்டானார். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கும் மணிஷ் பாண்டே பெரிய ஷாட்களுக்கு முயற்சி செய்யாமல் சிங்கிள் அடித்து மட்டுமே ரன் சேர்க்கிறார். அதே போல பந்துகளை திண்றுவிட்டு, களத்தில் நன்கு செட்டில் ஆகும் அவர், வெற்றியை தேடி தராமல் திடீரென அவுட்டாகிவிடுவதால் புதிதாக வரும் வீரர்கள் பிரஷரால் திணறுகின்றனர்.

பாண்டே வெளியேற வேண்டும்

பாண்டே வெளியேற வேண்டும்

இந்நிலையில் மணிஷ் பாண்டே அடுத்த சில போட்டிகளில் வெளியேறுவது நல்லது என முன்னாள் வீரர் நம்மன் ஓஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பேட்டிங் வரிசையில் 3வது இடம் என்பது மிக முக்கியமானது. சிறப்பாக ஆடி வெற்றியை தேடித்தர வேண்டும். ஆனால் மணிஷ் பாண்டே அதை செய்யவில்லை. அவர் தொடர்ந்து ஆடி வந்தால் அவரிடம் என்ன தவறு உள்ளது என்பதை உணரமுடியாது. எனவே அடுத்த சில போட்டிகளில் அவர் வெளியேற வேண்டும். ஆட்டத்தை நன்கு கவனித்து அதன் பின்னர் அவர் பிரச்னையை சரி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஜாதவ்

ஜாதவ்

ஐதராபாத் அணி கேதர் ஜாதவை கொண்டு வரவேண்டும். ஓப்பனர்கள் வார்னர் - பேர்ஸ்டோ சிறப்பாக கொடுக்கும் தொடக்கத்தை மிடில் ஆர்டரால் கொண்டு செல்ல முடியவில்லை. கேதர் ஜாதவ் சென்னையில் பல போட்டிகளில் ஆடியுள்ளார். எனவே அவர் மிடில் ஆர்டர் பேட்டிங்கிற்கும், ஆஃப் ஸ்பின்னராகவும் பயன்படுவார் எனத்தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, April 18, 2021, 17:32 [IST]
Other articles published on Apr 18, 2021
English summary
Pragyan Ojha Advice to Manish Pandey and Suggest to include Kedhar Jadhav
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X