இவரை பின் அணியில் எடுத்தது ஏன்? வலைப்பயிற்சிக்கு கூட தலை காட்டாத சிஎஸ்கே வீரர்.. பரபரப்பு பின்னணி!

சென்னை: சிஎஸ்கே அணியின் மூத்த வீரர் ஒருவர் வலைப்பயிற்சிக்கு கூட வராமல் பெரிய அளவில் வெளியே தலையை காட்டாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2018 ஐபிஎல் ஏலம் போலவே 2021 ஐபிஎல் ஏலத்திலும் சிஎஸ்கே மூத்த வீரர்களைத்தான் அதிகம் ஏலம் எடுத்தது. மொயின் அலி தொடங்கி கவுதம் வரை கொஞ்சம் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களை அணியில் எடுத்தது.

இதில் சிஎஸ்கே அணியில் சர்ப்ரைஸாக வந்து இணைந்தவர்தான் புஜாரா. ஐபிஎல் ஏலத்தில் கடைசி கட்டத்தில் இவர் எடுக்கப்பட்டார்.

ஏன்

ஏன்

புஜாரா மொத்தம் 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவர் சிஎஸ்கேவால் ஏலம் எடுக்கப்பட்ட போதே மற்ற அணிகள் கைதட்டி அந்த முடிவை பாராட்டியது. சிஎஸ்கே அணியின் மாற்று ஒப்பனராக இவர் அணியில் எடுக்கப்பட்டார்.

பயிற்சி

பயிற்சி

சிஎஸ்கே அணியில் எடுக்கப்பட்ட பின் சில நாட்கள் புஜாரா பயிற்சி மேற்கொண்டார். சிஎஸ்கே வீரர்களுடன் டிராவல் செய்தார். ஆனால் அதன்பின் புஜாராவை பெரிதாக வெளியே பார்க்க முடியவில்லை. தொடக்கத்தில் இவர் பயிற்சி செய்யும் வீடியோக்கள் வெளியானது.

வீடியோ

வீடியோ

புஜாரா சிக்ஸ் அடிக்கும் வீடியோக்கள் வெளியானது. ஆனால் அதன்பின் புஜாராவை எங்கும் பார்க்க முடியவில்லை. ஏன் சிஎஸ்கே ஆடும் போட்டிகளில் கூட பெவிலியலின் புஜாரா பெரிதாக தென்படுவது இல்லை. இவர் அணியுடன்தான் இருக்கிறாரா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு மிகவும் அமைதியாக உள்ளார். தற்போது எல்லாம் பெரிதாக வலைப்பயிற்சியில் கூட இவர் ஆடுவது இல்லையாம்.

டெஸ்ட்

டெஸ்ட்

டெஸ்ட் வீரரை சிஎஸ்கே எடுத்தது ஏன் என்று இதனால் கேள்வி எழுந்தது. இதற்கு ஒரு பாஸ்ட் பவுலரை அணியில் எடுத்து இருக்கலாம். குறைந்தது பவுலிங் ரொட்டேஷன் மேற்கொள்ளும் வகையிலாவது ஒரு பாஸ்ட் பவுலரை அணியில் எடுத்து இருக்கலாம். மாறாக புஜாராவை அணியில் எடுத்து.. தற்போது இருக்கும் இடமே தெரியவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: Pujara is not so active during match or practice of the CSK team
Story first published: Monday, April 19, 2021, 12:59 [IST]
Other articles published on Apr 19, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X