For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஒரு நபரின் தாக்கம்.. ராஜஸ்தானை வாரி சுருட்டிய அர்ஷ்தீப் சிங்.. ஐபிஎல்-ல் புதிய ரெக்கார்ட்!

துபாய்: 200 ரன்களுக்கு மேல் ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தானின் ஸ்கோரை தலைகீழாக மாற்றி அமைத்தார் அர்ஷ்தீப் சிங்.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

 IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி - IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

தொடக்கம்

தொடக்கம்

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிரடியாக அமைந்தது. ஓப்பனிங் வீரர்கள் எவின் லீவிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் நாலா புறமும் பவுண்டரிகளை விளாசினர். இதனால் முதல் விக்கெட்டிற்கு அந்த அணி 54 ரன்களை சேர்த்தது. அதிரடியாக ஆடி வந்த எவின் லீவிஸை அர்ஷ்தீப் சிங் அட்டகாசமான ஸ்லோவர் பால் மூலம் வெளியேற்றினார்.

ஆட்டத்தின் திருப்புமுணை

ஆட்டத்தின் திருப்புமுணை

7 ஓவர்களில் 68 ரன்களை குவித்திருந்த அந்த அணி நிச்சயம் 200 ரன்களுக்கு மேல் குவித்துவிடும் என் எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் மிடில் ஆர்டரில் லிவிங்ஸ்டன் மற்றும் லாம்ரார் ஆகியோர் அதிரடி காட்டி வந்தனர். ஆனால் அதனை மாற்றி அமைத்தார் அர்ஷ்தீப் சிங். பஞ்சாப் அணிக்கு அச்சுறுத்தல் கொடுத்து வந்த லிவ்விங்ஸ்டனை 25 ரன்களுக்கும், லாம்ராரை 43 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட் எடுத்தார். இதில் லாம்ரார் 17 பந்துகளில் 43 ரன்களை குவித்து மிகப்பெரிய தலைவலி கொடுத்தார்.

Recommended Video

மறுபடியும் IPL-க்கு வந்த சிக்கல்.. இம்முறை Natarajan-க்கு Coronavirus பாதிப்பு ?
புதிய பெஸ்ட்

புதிய பெஸ்ட்

இதன் பின்னர் வந்தவர்களில் சேட்டன் சகாரியா மற்றும் கார்த்திக் தியாகி ஆகியோரை வெளியேற்றி ஐபிஎல் தொடரின் தனது புதிய பெஸ்டை அர்ஷ்தீப் சிங் பதிவு செய்தார். பின் வரிசையில் வந்த ரியான் பராக், ராகுல் தேவட்டியா, கிறிஸ் மோரிஸ் ஆகியோரை முகமது ஷமி சொற்ப ரன்களுக்கு வெளியேற்றினார். முகமது ஷமி 3 விக்கெட்களை சாய்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சாதனை

சாதனை

இதன் மூலம் ஐபிஎல்-ல் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். 22 வயது ஆகும் அர்ஷ்தீப், ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் 5 விக்கெட்களை எடுத்த 3வது இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னர் கடந்த 2013ம் ஆண்டு உனத்கட் மற்றும் 2019ம் ஆண்டு அல்சாரி ஜோசப்பும் விக்கெட்களை எடுத்துள்ளார்.

குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

உச்சத்திற்கு சென்றிருக்க வேண்டிய ஸ்கோரை தடுக்க திருப்புமுணை ஏற்படுத்தியது லிவிங்ஸ்டன் மற்றும் லாம்ராரின் விக்கெட்கள்தான். எனவே அர்ஷ்தீப் சிங்கிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

Story first published: Tuesday, September 21, 2021, 22:25 [IST]
Other articles published on Sep 21, 2021
English summary
Punjab kings pacer Arshdeep becomes 3rd youngest to have clinched a fifer in IPL
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X