இதுதான் ஒரே வழி.. முக்கியமான நேரத்தில் தோனிக்காக விட்டுக்கொடுத்த ரெய்னா.. அப்படி செய்தது ஏன்?

சென்னை: சிஎஸ்கே கேப்டன் தோனிக்காக நேற்று ரெய்னா முக்கிய நேரத்தில் விட்டுக்கொடுத்தது பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

CSK-விடம் தோல்வி..Eoin Morgan விரக்தி பேச்சு! | IPL T20 | CSK VS KKR | Oneindia Tamil

சிஎஸ்கே கேப்டன் தோனி கடந்த இரண்டு வருடங்களாக சரியாக பார்மிற்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் தோனி சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை.

இதன்பின் ஐபிஎல் போட்டிகளிலும் தோனி பெரிதாக 2020ல் ஆடவில்லை. இதனால் அவர் எப்போது பார்மிற்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீசனிலும் தோனி பெரிதாக அதிரடி காட்டவில்லை. தோனி தற்போது பேட்டிங் ஸ்டைலை மாற்றி இருக்கிறார். முன்பெல்லாம் முதல் பாலில் இருந்தே அதிரடி காட்ட மாட்டார். ஆனால் இப்போதெல்லாம் இரண்டாவது பந்தே பவுண்டரி அடிக்க முயற்சி செய்கிறார்.

பிரஷர்

பிரஷர்

ஆனால் தோனி கடைசி கட்டத்தில் இறங்குவதால் அவருக்கு பிரஷர் அதிகமாக இருக்கிறது. இதனால் அவருக்கு பார்மிற்கு திரும்ப சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. கொஞ்சம் சீக்கிரமே பேட்டிங் இறங்கினால் கண்டிப்பாக தோனியால் அதிரடியாக ஆட முடியும்.

வாய்ப்பு

வாய்ப்பு

இதனால்தான் நேற்று தோனி ரெய்னா இறங்க வேண்டிய இடத்தில் பேட்டிங் செய்தார். ரெய்னா இறங்க வேண்டிய 4வது இடத்தை நேற்று தோனிக்காக விட்டுக்கொடுத்தார். நேற்று பேட்டிங் செய்ய சிறப்பான சூழ்நிலை இருந்தது. சிஎஸ்கே அணியும் நல்ல ரன் ரேட்டில் ஆடிக்கொண்டு இருந்தது.

ஆடியது

ஆடியது

இந்த சூழ்நிலையை பயன்படுத்தினால்தான் தோனி பார்மிற்கு வர முடியும் என்ற சூழ்நிலை இருந்தது. இதனால்தான் ரெய்னாவின் இடத்தில் தோனியை நேற்று இறங்க வைத்தனர். இதற்கு பலனாக 8 பாலில் தோனி 1 சிக்ஸ் உட்பட 17 ரன்கள் எடுத்தார். நேற்று தோனியின் பேட்டிங் நன்றாகவே இருந்தது.

பார்ம்

பார்ம்

முழுமையாக பார்மிற்கு திரும்பிவிட்டார் என்று சொல்ல முடியாது என்றாலும் நேற்று ஆட்டம் கண்டிப்பாக தோனிக்கு புதிய நம்பிக்கையை கொடுத்து இருக்கும். முக்கியமான நேரத்தில் நேற்று தோனி தனது பேட்டிங்கை ஆர்டரை மாற்றி களமிறங்கியது கண்டிப்பாக அவரின் பார்மில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: Raina given up his spot to Dhoni in yesterday match against KKR
Story first published: Thursday, April 22, 2021, 11:04 [IST]
Other articles published on Apr 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X