For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 முறை தொடர்ந்து ஒரே தவறு.. பஞ்சாப் அணியை வளர்த்துவிட்ட ராஜஸ்தான்.. கடின இலக்கை எளிதாக துரத்தியது!

துபாய்: ராஜஸ்தான் அணி தொடர்ந்து மூன்று முறை செய்த தவறால் பஞ்சாப் அணி பேட்டிங்கில் மிரட்டி விட்டது.

Recommended Video

எப்பவும் இப்படியே தான் நடக்குது.. Rajasthan-க்கு எதிரான போட்டியில் தோல்வி குறித்து KL Rahul வேதனை

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி - IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 186 ரன்களுக்கு சுருண்டது.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

அந்த அணியின் ஓப்பனிங் ஜோடியான எவின் லீவிஸ் - ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 54 ரன்களை சேர்த்தது. லீவிஸ் 36 ரன்களுக்கு அவுட்டானார். அதன் பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்கள், லிவிங்ஸ்டன் 25 ரன்களுக்கு வந்த வேகத்தில் வெளியேறினர். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் - லாம்ரார் சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். எனினும் இந்த ஜோடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

 கடைசி கட்டத்தில் சொதப்பல்

கடைசி கட்டத்தில் சொதப்பல்

சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஷ்வால் 49 ரன்களுக்கு வெளியேறினார். லாம்ரார் 43 ரன்களுக்கு வெளியேறினார். இதன் பின்னர் வந்த வீரர்களில் ஒருவர் கூட இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை. ராகுல் தேவட்டியா, கிறிஸ் மோரிஸ் என அனைவரும் ஏமாற்ற 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

 கடின இலக்கு

கடின இலக்கு

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி யில் தொடக்க ஜோடி முதலில் நிதானமாக விளையாடினர். ஆனால் அந்த ஜோடி 9.4 ஓவரில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த பார்ட்னர்ஷிப் முதல் ஓவரிலேயே பிரிந்திருக்க வேண்டியவை. ராஜஸ்தான் அணி செய்த 3 கேட்ச் தவறுகள் பெரிய ஆப்பு வைத்துவிட்டது.

3 முறை ஒரே தவறு

3 முறை ஒரே தவறு

ஆட்டத்தின் 2வது ஓவரில் சேட்டன் சக்காரியா வீசிய பந்தை கே.எல்.ராகுல் தூக்கி அடிக்க முயன்றார். கேட்ச் வந்த பந்தை எவின் லீவிஸ் தவறவிட்டார். இதன் பின்னர் ஆட்டத்தின் 5வது ஓவரில் கிறிஸ் மோரிஸ் வீசிய பந்தை கே.எல்.ராகுல் தூக்கி அடிக்க முயன்ற போது மீண்டும் கேட்ச்-க்கு சென்றது. ஆனால் இந்த முறை ரியான் பராக் அதனை தவறவிட்டார்.

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

2 முறை தப்பித்த கே.எல்.ராகுல் சற்றும் தடுமாறாமல் அதிரடி காட்டி வந்தார். இதனால் ஆட்டத்தின் 6வது ஓவரில் முஸ்திவிசூர் வீசிய பந்தை அடிக்க முயன்ற போது கேட்ச்-க்கு சென்றது. அதனை பிடிப்பதற்கு சேட்டன் சகாரியா டைவ் அடித்த போதும் அவரால் பிடிக்க முடியவில்லை. இதனால் 3 முறை உயிர்பெற்று பார்ட்னர்ஷிப்பை வளர்த்துவிட்டார். இறுதியாக கே.எல்.ராகுல் 49 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 120 ரன்களை சேர்த்தது.

Story first published: Tuesday, September 21, 2021, 23:12 [IST]
Other articles published on Sep 21, 2021
English summary
Rajasthan Royals 3 misfields gives a chance to punjab kings for 100 partnership in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X