For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலியா? பண்ட்-ஆ? ரவிசாஸ்திரி போட்ட சூசக ட்வீட்.. குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!

அகமதாபாத்: ஆர்சிபி - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சூசகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வார்த்தைய சொல்லிட்டாரே.. கவாஸ்கரின் மனதை தொட்ட டிவில்லியர்ஸ்.. ஒரு வீரருக்கு இவ்வளவு புகழ்சியா! இந்த வார்த்தைய சொல்லிட்டாரே.. கவாஸ்கரின் மனதை தொட்ட டிவில்லியர்ஸ்.. ஒரு வீரருக்கு இவ்வளவு புகழ்சியா!

புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட பெங்களூரு அணி இந்த வெற்றியின் மூலம் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியது.

ஆர்சிபி

ஆர்சிபி

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 171/5 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் 170 ரன்கள் வரை அடித்து ஒரு ரன்னில் தோல்வியடைந்தது. தொடக்க வீரர்களான விராட் கோலி (12), படிக்கல் (17) ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய ராஜ்தட் படிக்கர் (31), மேக்ஸ்வெல் (25) விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், டிவில்லியர்ஸ் வழக்கம் போல் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

 கடும் போராட்டம்

கடும் போராட்டம்

இதே போல் 170 என்ற இலக்கை துரத்திய டெல்லி அணியில் டாப் ஆர்டரிலும் சரிவு ஏற்பட்டது. ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித் சொதப்ப, பிரித்வி ஷா 21 ரன்களில் வெளியேறினர். எனினும் ஆட்டத்தை விட மறுத்த இளம் கேப்டன் ரிஷப் பண்ட் 48 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். அதே போல ஷிம்ரன் ஹெட்மையர் 25 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார். இறுதியில் 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

சாஸ்திரி ட்வீட்

சாஸ்திரி ட்வீட்

இந்நிலையில் இதுகுறித்து ரவி சாஸ்திரி போட்டுள்ள ட்வீட் கேள்விகளை எழுப்பியுள்ளது. விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட்-ன் புகைப்படங்களை பதிவிட்டு, அதில் நேற்று அற்புதமான ஆட்டத்தை பார்க்க முடிந்தது. 2021 ஐபிஎல் தொடரின் வெற்றியாளருக்கு விதைகள் விதைக்கப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

ஐபிஎல் தொடரில் இதுவரை கோலியின் ஆர்சிபி, பண்ட்-ன் டெல்லி அணி இரண்டுமே கோப்பையை வென்றதில்லை. எனவே இந்த இரு அணிகளில் எந்த அணி புதிய சாம்பியன் ஆவதற்கு விதையை விதைத்துள்ளது என சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Story first published: Wednesday, April 28, 2021, 20:27 [IST]
Other articles published on Apr 28, 2021
English summary
Ravi Shastri says there will be a new champion in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X